கதையை மொத்தமா மாற்றிய மீனா.. ரோகிணி பாவம்… மனோஜ் பிராடா? ஏன் மா நீ!

By :  Akhilan
Update:2025-02-24 09:18 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

ரோகிணி வீடியோ காலில் அட்டர்ன் செய்ய வித்யா குரல் கொடுக்கிறார். இருந்தும் அண்ணாமலைக்கு அவர் மீது சந்தேகம் வருகிறது. உடனே கிரிஷ் தன் பாட்டியிடம் இது அம்மா மாதிரி இல்லையே எனக் கேட்க அவளுக்கு உடம்பு சரியில்லை அதான் என்கிறார்.

அண்ணாமலையுடன் ரோகிணி மீட்டிங்கை முடித்துவிட வெளியில் வரும் கிரிஷை பார்க்க முத்து மற்றும் மீனா இருக்கின்றனர். ஹோட்டல் போகலாம் என அவர்கள் அழைக்க ரோகிணி அம்மா மறுப்பதற்குள் கிரிஷ் சரியென கூறிவிடுகிறார்.

அவர்களிடம் என்னுடைய அம்மா மீட்டிங் கலந்துக்கிட்ட மாதிரியே தெரியலை என்கிறார். உடனே ரோகிணி அம்மா அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதை சொல்கிறார். பின்னர், அவர்கள் கிளம்பிவிட மீனாவுக்கு புது சந்தேகம் முளைக்கிறது.

கிரிஷை உடைய அப்பா மனோஜ் தான் என்றும், அம்மா ஜீவாவாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறுகிறார். ஆனால் அவர்கள் 2 அல்லது 3 வருஷம் தானே ஒன்னாக இருந்தாங்க. ஆனா கிரிஷுக்கு 7 வயசு வரை இருக்குமே என்கிறார். நம்ம கிட்ட பொய் சொல்லி இருக்கலாம் எனக் கூறுகிறார்.

பழகுனதுக்கா 27 லட்சம் கொடுப்பாரு. கிரிஷ் நம்ம வீட்டுக்கு வந்த போ உங்க அண்ணன் சப்போர்ட் எல்லாம் செஞ்சி இருக்காரு. ரோகிணி தான் பாவம் குழந்தை இருக்கவரை போய் கல்யாணம் செஞ்சி இருக்காங்க என்கிறார். இந்த உண்மையை முதலில் கண்டுபிடிக்கணும் என்கிறார்.

வீட்டில் ஸ்ருதி போனை பார்த்துக்கொண்டே விஜயாவை இடித்துவிட எப்ப பார்த்தாலும் போன் தானா என்கிறார். அப்போ வரும் அண்ணாமலை இப்ப உலகமே போனுக்கு மாறிடுச்சு. இன்னைக்கு ஒரு அம்மா வீடியோ காலில் மீட்டிங் அட்டர்ன் செய்தது குறித்து பேசுகிறார்.

அப்போ ரோகிணி மற்றும் மனோஜ் வர மாஸ்க் போட்டு எதுக்கு வரணும் எனக் கேட்க அதுக்கும் மனோஜ் சப்போர்ட்டாக பேசுகிறார். கிரிஷ் விஷயத்துக்கு மனோஜே பேசிக்கொண்டு இருக்க இவர்களுக்கு சந்தேகமும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

ரோகிணியிடம் உன் பையனா இருந்தா எப்படி மீட்டிங் அட்டர்ன் செய்வ எனக் கேட்க அவர் எதுக்கு இந்த தேவையே இல்லாத பேச்சு எனக் கூட்டி செல்கிறார். உடனே மீனா மற்றும் முத்து இருவரும் இந்த விஷயம் குறித்து பேசி கண்டுபிடிக்க முடிவெடுக்கின்றனர்.

Tags:    

Similar News