சிங்கப்பெண்ணே: என்னை விட ஸ்டேட்டஸ்தான் முக்கியமா? மகேஷின் கேள்வியில் அதிர்ந்த தந்தை
சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் தற்போது கதையில் வேகம் எடுத்து வருகிறது. நேற்று நடந்த எபிசோடில் நடந்தவை இதுதான். ஆனந்தி மனசில் தான் இன்னும் இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். அங்கு பெசன்ட் நகர் கடற்கரையில் படுத்துக் கிடக்கிறான். அன்புவிடம் பேசுவது போல அவனுக்குத் தோன்றுகிறது.
எனக்கு ஒரு உதவி செய்: அப்போது யாரையும் உடன் அழைத்து வராதே என்று சொன்னதும் அன்புவும் சரி என்கிறான். ஆனால் ஆனந்தியும் உடன் வருவதாகச் சொல்கிறாள். அந்த நேரத்தில் ஆனந்தியைத் தள்ளி இருக்கச் செய்து விட்டு அன்பு போய் பார்த்து மகேஷிடம் பேசுகிறான். அப்போது எனக்கு ஒரு உதவி செய் என்கிறான் மகேஷ்.
ஒரு ரூம் ஒரு வாரத்துக்கு வாடகை எடுத்துத் தா. அங்கிருந்து கொண்டு நான் வேலை பார்க்கிறேன். அதன்பிறகு உனக்கு ரூமுக்கு தேவையான செலவைத் தருகிறேன் என்கிறான் மகேஷ். அதுபோல அன்புவும் அதெல்லாம் வேணாம் சார்னு சொல்லிவிட்டு அவனுக்கு தங்குவதற்கான ரூமை ரெடி பண்ணிக் கொடுக்கிறான்.
சங்கடப்படும் அன்பு: அதே நேரம் மகேஷ் படும் கஷ்டத்தைப் பார்த்து சங்கடப்படுகிறான். ஆனந்தியிடம் நடந்ததைச் சொல்கிறான். ஆனந்தியும் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல அன்புன்னு வருந்துகிறாள். மறுநாள் காலையில் மகேஷைப் பார்க்க வருகிறான் அன்பு. அங்கு ரூம் பாய் மகேஷ் மொட்டை மாடியில் படுத்திருப்பதாச் சொல்கிறான்.
கொசுக்கடி: இங்கு ஒரே கொசுக்கடின்னு அங்கே போய் படுத்து இருப்பதாகக் கூறவும் ரொம்பவே வருத்தப்படுகிறான் அன்பு. அதை ஆனந்தியிடம் போன் பண்ணிச் சொல்கிறான். அன்புவைப் பார்த்து மாற்றுவதற்கான உடையும், காலை டிபனும் வாங்கிக் கொடுக்கிறான். இதற்கிடையில் மகேஷின் அப்பாவும், வார்டனும் மகேஷ் தங்கி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு பார்க்க வருகிறார்கள்.
அந்த அறைக்கதவைத் தட்டவும் அன்பு திறக்கிறான். இருவரும் அவனை முறைத்துப் பார்க்க அன்பு என்ன சொல்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறான். அப்போது மகேஷ் குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி வருகிறான். நீ தான் எல்லாத்துக்கும் காரணமான்னு அன்பை கடிந்து கொள்கிறார் மகேஷின் அப்பா.
ஸ்டேட்டஸ்தான் முக்கியம்?: அதே நேரம் என்ன அன்பு நீ தான் இவங்களுக்கு போன் பண்ணி வரச் சொன்னாயான்னு மகேஷ் கேட்கிறான். ஏன் இப்படி பண்றே? அம்மாவிடம் கோவிச்சிக்கிட்டு இப்படித்தான் ரூம்ல வந்து தங்குவியா? என் மரியாதை என்னாவதுன்னு கேட்கிறார் மகேஷின் அப்பா. அப்போது மகேஷ் அப்படின்னா என்னை விட உங்களுக்கு ஸ்டேட்டஸ்தான் முக்கியம்? அதனாலதான் பார்க்க வந்தீங்களான்னு மகேஷ் கேட்கவும் எபிசோடு முடிகிறது.