சிங்கப்பெண்ணே: காதலுக்கும், காதலியின் வலிக்கும் போராட்டம்... பரிதவிக்கும் ஆனந்தி
சிங்கப்பெண்ணே சன்டிவியில் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இதன் திரைக்கதைதான் இதற்கு காரணம். ஒவ்வொரு வசனமும் செதுக்கி இருக்கிறார்கள். காதலுக்கும், அதன் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று நடந்த எபிசோட் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. வாங்க பார்க்கலாம்.
கல்யாணம் செஞ்சி வைங்க: அன்பு மகேஷின் அறையில் இருந்து அவனுக்கு உதவியாக பல வேலைகளைச் செய்து வருகிறான். அப்பா வந்து மகேஷைப் பார்த்து வீட்டுக்கு அழைக்கும்போது செல்ல மறுக்கிறான். உங்களுக்கும், அம்மாவுக்கும் ஸ்டேட்டஸ்தான் முக்கியம். நான் இல்ல. அதனால நான் வரல. உங்களால முடிஞ்சா எனக்கு ஆனந்தியைப் பேசி கல்யாணம் செஞ்சி வைங்க. வர்றேன்னு சொல்றான் மகேஷ்.
எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கும் அன்புவுக்கு மகேஷின் வலி தாங்க முடியவில்லை. அதை ஆனந்தியிடம் சொல்லிக் கதறி அழுகிறான். என்னால யாருக்கும் எந்தக் கெடுதலும் வரக்கூடாது. நம்ம காதல் யாருக்குமே நிம்மதியைத் தரல. அழகனா ஏன் உன் வாழ்க்கையில வந்தேன்னு இருக்கு.
ஆனந்தி கதறல்: நான் பாட்டுக்கு எங்கேயாவது போயிருப்பேன். ஏன் என் வாழ்க்கையில வந்தே? என கதறி அழுகிறான் அன்பு. இதற்கிடையில் ஆனந்தியும் மகேஷிடம் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் பிடிவாதம் கொஞ்சமும் குறையாமல் மகேஷ் வீட்டிற்குச் செல்ல மறுக்கிறான். நான் யாருன்னு அப்போ தான் எனக்குத் தெரியும்.
காயத்ரி ஆறுதல்: என் மனசு முழுக்க நீ இருக்கும்போது நான் எப்படி அங்கே போவேன்னு மகேஷ் சொல்ல ஆனந்தியும் மனதுக்குள் பரிதவிக்கிறாள். இந்நிலையில் அறையில் தனிமையில் உட்கார்ந்து அழுவதைப் பார்த்து ஆனந்தியின் தோழி காயத்ரி வருகிறாள். அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனந்தியிடம் இது காதலுக்கான சோதனையா எடுத்துக்க. எல்லாவற்றையும் தாண்டித்தான் ஜெயிக்க முடியும்னு சொல்கிறாள் காயத்ரி.
ஆனால் ஆனந்தியோ அன்பு மேல தப்பு இல்ல. அவரு இடத்துல இருந்து பார்த்தா அவர் சொல்றது நியாயம்தான் என்கிறாள் ஆனந்தி. அதே நேரம் ஆனந்தி அழகனத்தான் காதலிக்கிறான்னு மகேஷூக்குத் தெரிஞ்சா அவன் இவளை வெறுக்க ஆரம்பிச்சிடுவான்.
மித்ரா போடும் திட்டம்: ஆனா அந்த அழகன் யாருன்னு நாம கண்டுபிடிக்கணும்னு சபதம் எடுக்கிறாள் மித்ரா. அதற்காக அவளது தோழியை விட்டு வார்டன் ஆனந்தியைக் கூப்பிடுவதாக அழைத்து வா என சொல்லி அனுப்புகிறாள். அவளும் சொல்ல ஆனந்திக்குப் பதிலாக காயத்ரி வார்டனைப் பார்க்கச் செல்கிறாள்.