Singappenne: ஆனந்திக்கு என்னாச்சு? மயிலு பாட்டி வேற கர்ப்பத்தைக் கண்டுபிடிச்சிட்டாளே!
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பம் வெளியில் தெரிந்துவிட்டதா? மயிலு பாட்டி சொல்கிறாளே என்னாச்சுன்னு எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதற்கு இந்த எபிசோடில் விடை கிடைக்கிறதான்னு பார்க்கலாமா...
மருந்து கொடுத்து அரை மணி நேரம் ஆச்சு. கோகிலா இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கா. என்னாச்சுன்னு மயிலு பாட்டியிடம் சேகர் கேட்கிறான். கண்டிப்பா வாந்தி வரும்னு மயிலு சொல்கிறாள். கல்யாணப்பந்தியில் அன்பு, ஆனந்தி, சௌந்தர்யா, வேலு, வாணி, மித்ரா என அனைவரும் பரிமாறுகிறார்கள்.
கோகிலாவும், புதுமாப்பிள்ளையும் சாப்பிட உட்காருகிறார்கள். இருவரையும் ஒருவருக்கொருவர் ஊட்டி விடச் சொல்கிறான் அன்பு. அதன்படியே செய்கிறார்கள். சுயம்பு சேகரிடம் மனசு கஷ்டமா இருக்குடா. எல்லாரு முன்னாடியும் ஆனந்தி கேவலமா பேசிட்டாடா. ஆனந்தி மட்டும் எனக்கு இல்லன்னா இந்த சுயம்புவோட சுயரூபம் என்னன்னு காட்டாம விட மாட்டேன் என்கிறான் சுயம்பு.
அதுக்கு சேகர் இந்தக் கல்யாணம் நடக்காதுன்ணேன். நடக்குறது எல்லாம் உனக்குத்தான் சாதகமா இருக்கும்னு சொல்கிறான். எதை வச்சி இவன் இப்படி சொல்றான்னு சுயம்பு மனதுக்குள் கேட்கிறான். மயிலு கொடுத்த பாலை ஆனந்தி குடித்து விட்டு வாழைப்பழத்தை கோகிலாவிடம் கொடுக்கிறாள். ஆனந்தி குடித்ததாலோ என்னவோ பந்தியில் பரிமாறும்போது மயங்கி விழுகிறாள்.
அதைப் பார்த்ததும் ஆனந்தியின் அம்மா மயிலு பாட்டியிடம் ஏய் மயிலு நீ மருத்துவச்சி தானே. ஆனந்திக்கு என்னாச்சுன்னு வந்து பாரு என்கிறாள். அனைவரும் பதற்றத்துடன் ஆனந்தியையே பார்க்கின்றனர். மயிலு நாடி பிடித்துப் பார்க்கிறாள்.
ஆனந்திக்கு என்னாச்சுன்னு எல்லாரும் கேட்கிறார்கள். அதற்கு அது வந்து வந்துன்னு சொல்லாமல் போய் விடுகிறாள். அதே நேரம் ஆனந்திக்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தைத் தெளிய வைக்கிறார்கள். அடுத்து சேகர் என்னாச்சுன்னு மயிலுவிடம் கேட்க ஆனந்தி கர்ப்பமா இருக்காடான்னு சொல்கிறாள் மயிலு பாட்டி. அதன்பிறகு என்ன ஆனது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.