சூப்பர் ஹீரோவாக அமீர்கான்!.. தரமான சம்பவம்!. ரெடியா இருங்க!.. ஹைப் ஏத்தும் லோகேஷ்!..
Lokesh kanagaraj: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் அவரின் திரை மொழிதான். அவர் கதை சொல்லும் விதமும், ஆக்சன் காட்சிகளும் இளம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. மேலும், குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிக்கும் படங்களாகவும் இருக்கிறது.
விஜயை வைத்து 2 படங்கள் இயக்கினாலே பெரிய இயக்குனர்தான். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். எல்லோருக்குமே ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. லோகேஷும் ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவர்தான். லோகேஷுக்கு ஆல் டைம் ஃபேவரைட்டாக இருப்பது மணிரத்னம் இயக்கிய தளபதி.
அதனால்தான் கூலி படத்தில் சில காட்சிகளில் ரஜினியை தளபதி லுக்கில் காட்டியிருக்கிறார். டப்பிங்கின் போது படம் பார்த்த ரஜினியும் ‘இப்படம் எனக்கு இன்னொரு தளபதி’ என சொல்லி சிலாகித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி உலகமெங்கும் 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
கண்டிப்பாக இப்படம் 1200லிருந்து 1500 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா போன்ற மற்ற மொழி நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அதோடு, விக்ரம் படத்தில் ரோலக்ஸாக அமீர்கான் நடித்தது போல கூலி படத்தில் அமீர்கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அமீர்கானுக்கும் லோகேஷுக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகியிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஒரு புதிய படத்தில் லோகேஷும் அமீர்கானும் இணையவுள்ளனர். இது நேரடி ஹிந்தி படமாக உருவாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு பேன் இண்டியா படமாக வெளியாகவுள்ளது.
இந்த படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் ‘இது ஹிந்தி படம்தான். ஆனால், உலகத்திற்கே பொதுவான கதை. இது அழகான கதை. சூப்பர் ஹீரோ கதை. கண்டிப்பாக பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். இந்த படத்தின் கதையை பல வருடங்களாக எழுதி வருகிறேன்’ என சொல்லியிருக்கிறார். சூர்யாவுக்கு சொன்ன இரும்பைக்கை மாயவி படத்தை அமீர்கானுக்கு சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். லோகேஷ் அடுத்து இயக்கும் படமாக இது இருக்கும் என கணிக்கப்படுகிறது.