Siragadikka Aasai: ரோகிணியால் அலறி துடித்த குடும்பத்தினர்… மீனா வீட்டுக்கு வர நேரம் வந்தாச்சே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.
ரோகிணி அழைத்து வந்த பெண் சமைத்து பரிமாற முதல் வாய் எடுத்து வைத்தவுடனே ஜெர்க்காகி விடுகின்றனர். இருந்தும் தப்பா சொல்லிட கூடாதுனு என்பதால் அமைதியாக கஷ்டப்பட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிற ஸ்ருதி அலறி ஓட அதே நேரத்தில் விஜயாவும் ஓடுகிறார்.
இருவரும் வாய் கழுவி விட்டு வர முத்து அண்ணாமலையை சாப்பிட வேண்டாம் எனக் கூற சாப்பாடு வாங்கி வரேன் என்கிறார். வீட்டில் எல்லாருக்கும் வாங்கி வரச்சொல்ல விஜயா வேண்டாம் என சமாளிக்க பார்க்க அப்போ சாப்பிடு என்கிறார். ஐய்யோ வேண்டாம் என அலறி எனக்கும் சாப்பாடு வாங்கி வரச்சொல்கிறார்.
அந்த பெண் வேறு எதுவும் சாப்பிட செஞ்சி தரவா எனக் கேட்க அய்யோ அம்மா வேண்டாம். நீ முதலில் இங்கிருந்து கிளம்பு என்கிறார். அவர் வேற எதுவும் செய்றேனே எனக் கேட்க காசை கொடுத்து ஷோரூம் கிளம்பு என துரத்தி விடுகிறார்.
செல்வம் தன்னுடைய கல்யாண டிரிப்பிற்கு காரை டெக்கரேஷன் செய்ய வேண்டும் என்பதால் மீனாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக சொல்ல நண்பர்கள் முத்து எதுவும் திட்ட போறான் என்கிறார். செல்வம், அவங்க வேலைக்கு வராங்க செஞ்சிட்டு போக போறாங்க என்கிறார்.
மீனா தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கார் டெக்கரேஷன் செஞ்சி கொண்டு இருக்கிறார். அவர் தோழியிடம் பேசுவதாக நினைத்து முத்து சாப்பிட்டீங்களா, எப்படி இருக்கிங்க எனப் பேச முத்துவும் செல்வத்திடம் பதில் சொல்வது போல மீனாவிடம் பேசுகிறார்.
பின்னர் நண்பர் ஒருவர் வந்து பங்ஷனுக்கு அழைக்க மீனாவையும் சேர்ந்து நின்று பத்திரிக்கை வாங்கிக்கொள்ள சொல்கிறார். பின்னர் மீனாவை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என முத்துவிடம் செல்வம் கூறுகிறார். நான் அவளை போக சொல்லலையே எனக் கேட்க அன்னைக்கு சொன்னீயே என்கிறார்.
நான் எங்க சொன்னேன். உள்ள போனவன் சொன்னான். கட்டிக்கிட்டு வந்த வீட்டுக்கு யாரும் சொல்லாம வரலாம் என்கிறார். மீனா சிரித்துக்கொள்ள அண்ணன் உன்ன வீட்டுக்கு வரச்சொல்லி சொல்லுது என்கிறார். ரோகிணி ஷோரூமுக்கு ஸ்ருதியின் அம்மா வருகிறார்.
ரோகிணி பதற அவர் மிக்ஸி பார்ப்பதாக சொல்லி அவரை தனியே அழைத்து சென்று காசு எப்ப தருவ எனக் கேட்க கொஞ்சம் டைம் தாங்க என்கிறார். ரோகிணியிடம் உனக்கு ஒரு ஹெல்ப் கேட்டப்ப நான் செஞ்சேன். இப்போ நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணும் என்கிறார்.
ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று நீத்து எதோ தப்பா மனதில் வச்சிட்டு இருக்க மாதிரி இருக்கு. அதனால் நீ போய் பேசிட்டு வந்து என்னிடம் சொல்லு என்கிறார். எனக்கு அவளோட பெரிய ரிலேசன்ஷிப் இல்ல எனக் கூற அது போல தான் உனக்கும் எனக்கும் பெரிய கனெக்ஷன் இல்ல. வந்து என்னிடம் 2 லட்சம் காசு வாங்கலை என்கிறார்.
சரி காசை கொடு எனக் கேட்க நான் இந்த வேலையை செய்றேன் என்கிறார். மிக்ஸியை ஓகே செய்துவிட்டு ரோகிணியிடம் இதை அனுப்பு என்கிறார். அவர் கார்டா கேஸா எனக் கேட்க ரெண்டும் இல்ல. எனக்கு கொடுக்க வேண்டிய காசில் கழிச்சிக்கோ என்கிறார்.
ஐயோ ஆண்ட்டி மனோஜுக்கு நான் காசு வாங்குனது தெரியாது. நான் இப்போ என்ன சொல்வேன் எனக் கூற அது உன் கவலை. என் காசில் தானே கழிச்சிக்க சொல்றேன் என்கிறார். மனோஜ் பின்னர் வந்து ரோகிணியிடம் காசு தந்தாங்களா எனக் கேட்க இல்ல பின்னாடி என் அக்கவுண்ட்டுக்கு அனுப்புறதா சொல்லிவிட்டதாக கூறு சமாளிக்கிறார்.