Connect with us

Cinema News

ஏங்க இவர மியூசிக் போட சொன்னா என்ன வேலை பார்க்குறாரு… அனிருத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Anirudh: தமிழ் சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டராக இருக்கும் அனிருத் பாட்டு போடுவதில் மட்டுமல்ல இந்த விஷயத்திலும் கில்லி தான் போல. ஆனால் அதில் ஒரு பாரபட்சத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கிசுகிசுத்துவருகின்றனர். அதுகுறித்த சுவாரஸ்ய தகவலும் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் தற்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு ஒரே மியூசிக் டைரக்டர் தான் இருக்கார் என்ற நினைப்பில் எல்லாரும் அவரை தான் போட்டு தங்கள் படங்களை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர், ஜவான் படங்கள் ரிலீஸாகி விட்டது.

இதையும் படிங்க: 10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..

தற்போது அவரின் மியூசிக்கில் லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2 படங்களிலும் மியூசிக் போட்டு வருகிறார். கிட்டத்தட்ட அனிருத்தின் சமீபத்திய மியூசிக் அனைத்துமே டாப் ஹிட்டாக தான் அமைந்து வருகிறது. ரஜினிக்கு அவர் போட்ட ஹுக்கும் பாடல் மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.

இதனால் அடுத்தடுத்து அவரின் எல்லா படங்கள் மீதும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனையடுத்து அடுத்து எந்த சின்ன ஹீரோக்களுக்குமே அனிருத் இசையமைக்க முடியாது என மறுத்து விட்டாராம். இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் சிம்புவே இணைந்து இருக்கிறார்.

அவரின் ஒரு படத்துக்கு அனிருத்தினை இசையமைக்க கேட்க என்னால் முடியாது நான் பிஸி என சிம்புவுக்கே பெப்பே காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிஸியான வேலையில் கூட அனிருத் தான் இசையமைக்கும் படங்களுக்கு ரிவியூ சொல்வதையுமே வாடிக்கையாக வைத்து இருக்கிறாராம்.

இதையும் படிங்க: இப்போ தெரியுதா? ஏன் அஜித் எல்லாரையும் அவாய்டு பண்றாருனு! லாரன்ஸ் கொடுத்த திடீர் ஷாக்

அதில் ஜெயிலர் மற்றும் ஜவான் படங்களுக்கு ஸ்மைலியால் ரிவியூ சொல்லினார். அப்படங்களும் டாப் ஹிட்டாக அமைந்தது. தற்போது அதே போல ஸ்மைலி ரிவியூவை லியோ படத்துக்கு போஸ்ட் போட்டு இருக்கிறார். தற்போது ரசிகர்கள் ஏங்க பிஸியான நேரத்துல இந்த ரிவியூலாம் தேவையா என கலாய்த்து வருகின்றனர். ஒருசிலரோ அனிருத் எல்லா படத்துக்கும் ஸ்மைலி ரிவியூ செய்யுங்க எனக் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். தற்போது அனிருத் போட்ட அந்த ட்வீட்கள் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

அனிருத்தின் ரிவியூக்களுக்கு: https://x.com/iammoviebuff007/status/1711378466229367090?s=20

google news
Continue Reading

More in Cinema News

To Top