Connect with us
நடிகர்கள்

Cinema News

நாங்களாம் யாரு தெரியுமில்ல.. பந்தாவால் பாழாய்ப்போன 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் மாஸ் டயலாக் சொன்னால் தான் ரசிக்க முடியும். ஆனால் சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் தங்களை ஹீரோ என நினைத்துக்கொண்டு வாய் சவடால் பேசி பல்ப் வாங்கிய கதை நிறையவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த வாயாலே அவர்களுக்கு பட வாய்ப்புகள் நழுவி சென்றுவிடுமாம். அதில் தங்கள் சினிமா வாழ்க்கையை தொலைத்த சில பிரபலங்கள் உங்களுக்காக…

வடிவேலு:

நகைச்சுவை நடிகர்களுக்கு ரசிகர்கள் ஏராளம் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு வடிவேலு. வைகை புயல் எனச் செல்லமாக அழைக்கப்படுவார். வாயால் எத்தனை உயரம் வளர்ந்தவருக்கு அந்த வாயே பாதாளத்தில் தள்ளி விட்டது. ஏற்கனவே விஜயகாந்துடன் ஒரு பனிப்போர் இவருக்கு நடந்து வந்ததாம். அந்த நேரத்தில், விஜயகாந்திற்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

அப்பொழுது, நாகரீகமற்று விஜயகாந்தை அவர் விமர்சிக்க திரையுலகத்தினர் அதிர்ந்தனர். ஆனால் வடிவேலுவின் கெட்ட நேரம் விஜயகாந்த் அப்பொழுது வெற்றி பெற்று எதிர்கட்சியாக ஆட்சிக்கு வந்தார். அதில் இருந்து வடிவேலுவிற்கு வாய்ப்புகள் குறைய துவங்கியதாம். இன்று வரை அவரால் அதை சரி செய்யவே முடியவில்லை.

சுதாகர்:

ரஜினி படங்களுக்கே டப் கொடுத்தவர். பாரதிராஜாவின் ஆஷ்தான ஹீரோ. நல்ல நிலைமையில் இருக்கும் போது, இவரிடம் ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் தலை தூக்கியதாம். சூட்டிங்கிற்கு குடித்து விட்டு, கண்டப்படி பேசுவாராம். இதனால் படப்பிடிப்புகள் நிற்க துவங்கியதாம். இவரை வைத்த படமியக்கணும் என்று பலரும் அலறினர். தொடர்ந்து, அவரால் ஹீரோவாக மீண்டும் தமிழில் தலை தூக்கவே முடியவில்லை. தெலுங்கில் சில படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசன்:

தமிழ் சினிமாவின் சர்ச்சை மன்னன். கோலிவுட்டில் பெரிய இடம் பிடிப்பார் என பேச்சுகள் துவங்கிய நிலையில், சிம்பு செய்த சில செயல்கள் அவர் காலை வாரியது. வல்லவன் படத்தில் ஒரு போஸ்டர் ரிலீஸாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து, பாடல்களில் சில தேவையில்லாத வார்த்தையை பயன்படுத்தினார். ஒருபடி மேலேறி, பீப் சாங் ஒன்றை வெளியிட பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. நிறைய கேஸ்களை சந்தித்தார். தொடர்ந்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது. தட்டிமாறி கொண்டு இருந்தவர் சில காலம் காணாமல் போனார். தற்போது மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இனிமேயாது, வாயை அடக்குவாறா என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.

இதை படிங்க: எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞன். பல திறமை இருந்தாலும் இவர் வாய் தான் இவருக்கு எதிரி எனக் கூறப்படுகிறது. பாடி வீட்டு ஏழை படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து இவர் இயக்கி இருக்கிறார். ஆனால்,வாய் சும்மா இல்லாமல் அவரை வேலைக்காரன் என சந்திரபாபு கூறினாராம். அதுமட்டுமல்லாது, தொடர்ந்து எம்.ஜி.ஆர் குறித்து பேச அவரின் படத்தை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தாராம். படமும் கடைசி வரை முடியவே இல்லை. இதில் அவருக்கு ஏற்பட்ட கடனில் மூழ்கி மொத்த வாழ்க்கையை இழந்தார் எனக் கூறப்படுகிறது.

சுமன்:

கோலிவுட்டில் நல்ல படங்களை கொடுத்தவர். ஒரு கட்டத்தில் சுமனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்ததாம். அந்த கால சாக்லேட் பாய் என பேசப்பட்டது. அதை உடைக்கும் விதமாக, இவரிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் சுமனை கீழே தள்ள துவங்கியதாம். அதுமட்டுமல்லாது, நடிகைகளுடன் தவறான பழக்கம் என பல பிரச்சனைகளால் ஹீரோ அந்தஸ்த்தை இழந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top