விஜய்க்கு போட்டியாக அரசியலுக்கு வரப்போகிறாரா சங்கீதா?.. திடீரென வெளியே தலை காட்டியுள்ளாரே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:54  )

நடிகர் விஜய்யுடன் சமீப காலமாக எந்தவொரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் தலை காட்டாமல் இருந்து வந்த சங்கீதா விஜய் மாவீரன் படத்தை பார்த்ததற்கு பிறகு தற்போது மீண்டும் தலையை காட்டியிருப்பது ஏகப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.

முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரத்தன் டாட்டா மறைவுக்கும் முரசொலி செல்வம் மறைவுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

தவெக தலைவர் விஜய் முரசொலி செல்வம் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். விஜய் சார்பாக அவர் வந்திருந்தாரா? அல்லது விஜய்க்கு தெரியாமல் தனிப்பட்ட முறையில் வந்துள்ளாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

விஜய் கட்சி தொடங்கி கொடியை அறிமுகப்படுத்திய நிகழ்விலும் விஜய்யின் தி கோட் படம் வெளியான போது தியேட்டரில் படம் பார்க்க கூட வராத அவர் தற்போது முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கிதா விஜய்க்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு எதிராக திமுகவில் சேர்ந்து அரசியல் செய்யப் போகிறாரா சங்கீதா விஜய் என்கிற கேள்விகளையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஜய்யின் தளபதி 69 பட பூஜையில் கூட சங்கீதா விஜய் கலந்துக் கொள்ளவில்லை. விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. விஜய்யின் மகன் சஞ்சய் கூட அப்பாவின் நிழலில் இல்லாமல் தனியாக லைகா நிறுவனத்தில் படம் இயக்க படாதபாடு பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story