விஜயை வெற்றிமாறன் இயக்குவது உண்மையா?!. நடந்ததும் நடக்கப்போவதும் இதுதான்!..
Thalapathy 69: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பாடம் கற்றவர். முதல் படமான பொல்லாதவன் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன்பின் ஆடுகளம் படத்தில் தேசிய விருது வாங்கினார். இப்படத்தில் தனுஷுக்கும் தேசிய விருது கிடைத்தது.
அதன்பின் விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அடித்து ஆடினார். இதில், அசுரன் படத்திற்கு தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது. இப்போது விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: தளபதியை பார்த்து புரட்சி தளபதிக்கு வந்த ஆசை!.. இது எங்க போய் முடியுமோ!..
இந்நிலையில்தான், விஜயின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதை பலரும் நம்பி ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் செய்தியாக வெளியானது. விஜய் ரசிகர்களும், வெற்றிமாறன் ரசிகர்களும் தங்களின் சமூகவலைத்தளங்களில் இதை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கடைசியாக அவர் நடிக்கலாம் எனவும் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என்றுதுதான் விஜய் வட்டாரம் சொல்கிறது. இப்படி ஒன்று நடக்கவே இல்லை என சத்தியம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் கட்சி!.. ஒரே வார்த்தையில் சோலியை முடித்த வடிவேலு.. இப்படி சொல்லிட்டாரே!..
சில வருடங்களுக்கு முன்பு விஜயிடம் வெற்றிமாறன் ஒரு லைனை சொன்னது உண்மைதான். ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு படம் உருவாக வாய்ப்பில்லை என சினிமா செய்தியாளர்கள் சொல்கிறார்கள். விஜய் ஒரு படத்தை துவங்கினால் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பார். ஆனால், அது வெற்றிமாறனிடம் நடக்காது. ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பை நடத்துவார்.
அதோடு, விடுதலை 2 படத்தை முடித்தபின் வாடிவசல் மற்றும் ஒரு வெப் சீரியஸ், அதோடு, அஜித்துடன் ஒரு படம் என வெற்றிமாறனின் கையில் சில படங்கள் இருக்கிறது. அஜித்துடன் அவர் இணைவாரா என்பதே சந்தேகம்தான். எனவே, இதே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் சும்மா கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: தலைவர் 171ல் ரஜினிக்கு அந்த படத்தோட லுக்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைக்கும் லோகேஷ் கனகராஜ்..