நீ நடிகன்டா!.. தியேட்டர் தியேட்டரா செல்லும் கவின்.. ஸ்டார் படத்தை பார்த்துட்டு கொண்டாடும் ஃபேன்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமான கவின் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்த ஏகப்பட்ட ரசிகர்களையும் ரசிகர்களையும் கவர்ந்தார். சினிமாவில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்கிற வெறியுடன் தொடர்ந்து போராடிய கவின் நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் முதல் படம் அவருக்கு வெற்றி படமாக மாறவில்லை.

அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். அந்த சீசனில் பண பெட்டியுடன் கவின் கிளம்பிச் சென்றதை இன்னமும் ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க: குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

லாஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் தோல்வியும் கவினை மிகவும் பாதித்தது. மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என வரிசையாக ஹாட்ரிக் அடித்துள்ளார்.

லிப்ட் படத்தை விட டாடா படம் சிறப்பாக இருந்தது என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது டாடா படத்தை விட ஸ்டார் திரைப்படம் நடிகனாக கவினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..

ஸ்டார் திரைப்படம் இன்று வெளியான நிலையில், தொடர்ந்து பல்வேறு தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து வருகிறார் நடிகர் கவின். ரசிகர்கள் கூட்டத்தில் கவின் அலைமோதி வரும் காட்சிகள் வெளியான நிலையில், தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் தயார் என பலரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், தற்போது வெற்றி தியேட்டரில் ரசிகர்கள் படத்தைப் பார்த்த கவின் கடைசியாக அவர்கள் முன் தோன்ற ஒட்டுமொத்த ரசிகர்களும் “நீ நடிகன் டா” என பாராட்டி தள்ளி உள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. அனைத்து அன்புக்கும் மிகப்பெரிய நன்றியென கவினும் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

 

Related Articles

Next Story