இந்த மூவரும்தான் டெமி காட்ஸ் – ஜி.வி.பிரகாஷ்

X
இந்த மூவரும்தான் டெமி காட்ஸ் – ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷ் முக்கியமானவர். வெயில் படம் மூலம் அறிமுகம் ஆன அவர் குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இவரது இசயில் வெளிவரும் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் தற்போது ப்பல பப்டம்க்களுக்கு இசையமைத்து வந்தாலும் நடிகராகவும் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் இம்மார்டல். மாரியப்பன் சின்னா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ், ஒரு இசையமைப்ப்பாளருக்கு டெமி காட்ஸ் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரும்தான். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.