90களில் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் தேனிசை தென்றல் தேவா. இளையராஜா, ரஹ்மான் என இருவர் இருந்தாலும் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் பாடல்களை கொடுத்து தனி இடம் பிடித்தவர் இவர். குறிப்பாக வட சென்னையின் அடையாளமான கானா பாடலை தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தியவர் இவர். மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி தேவா காலமானார். அவருக்கு வயது 76.
ரஜினி, கமல், முதல்வர் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரின் உடல் ஆற்காடு அருகேயுள்ள அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்களை பார்ப்போம்..
தேவா கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்..
சினிமாவில் இசையமைப்பதற்கு பக்தி பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். அவரை கேசட்டுகளாக வெளிவந்தது.
மேலும், கிராமங்களுக்கு சென்று குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு நாடகங்களை நடத்தியிருக்கிறார்.
சென்னை தூர்தர்ஷனில் சில வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.
1970-களில் சந்திரபோஸுடன் இணைந்து இசைக்குழு நடத்தி பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.
இளையராஜாவுக்கு பயிற்சியளித்த அதே ஆசிரியரிடம் இசையை பயின்றவர்தான் தேவா..
1996ம் வருடம் மட்டும் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார் தேவா.







