ஜினியின் நடிப்பில் உருவாகி கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க நெல்சன் இயக்கியிருந்தார். ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் முதல் பாகம் 2013ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.
எனவேதான், கூலி படத்திற்கு பின் ஜெயிலர் 2-வை கையிலெடுத்தார் ரஜினி. அவர் கணித்தது வீணாகவில்லை. படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து விட்டது. ஜெயிலர் 2 படத்திற்கு பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்கள் இல்லை. அதோடு பலரும் குடும்பத்தோடு தியேட்டருக்கு செல்வதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..
இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் 2 திரைப்படம் 424.25 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அநேகமாக ஆயுத பூஜை விடுமுறை இரண்டு நாள் முடியும்போது ஜெயில 2 ரூ.600 கோடி வசூலை தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும், ஜெயிலர் முதல் பாகம் ரூ.630 கோடி வசூல் செய்த நிலையில் அந்த சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் முறியடிக்கும் என கணிக்கப்படுகிறது..







