தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சில படங்கள் சறுக்கினாலும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வார். 75 வயதிலும் சுறுசுறுப்பாக, அதுவும் ஹீரோவாக நடித்த வருகிறார்.
அவருடன் 80, 90 காலகட்டங்களில் நடித்த சக நடிகர்கள் குணச்சித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். அதில் பலரும் காணாமல் கூட போய் விட்டார்கள். ஆனால் ரஜினியோ இப்போதும் 600 கோடிக்கு மேல் வசூலை கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013ம் வருடம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.630 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது..
மூன்று வருடங்களுக்கு கழித்து தற்போது ஜெயிலர் 2 படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி நான்கு நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ450 கோடி வரை வசூல் செய்து விட்டது. அனேகமாக இந்த வார இறுதிக்குள் இந்த திரைப்படம் 800 கோடி வரை வசூல் செய்துவிடும் என கணிக்கப்படுகிறது.
விஜயின் ஜனநாயகன் மொத்தமாகவே ரூ.300 கோடி மட்டுமே வசூல் செய்தது. சூர்யாவின் கருப்பு திரைப்படம் 340 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் 4 நாட்களிலேயே ரூ.450 கோடி வசூல் செய்து 2026ம் வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறியிருக்கிறது.






