தளபதி என்கிட்ட அந்த டயலாக்கை தான் சொல்ல சொல்லி கேட்பாரு!.. அரிசி மூட்டை ஜெனி தியேட்டரில் ஆட்டம்!..

Published on: May 1, 2024
---Advertisement---

கடந்த நான்கு மாதங்களாக தமிழ் சினிமாவில் 80 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதில் ஒரு படம் கூட இதுவரை மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக மாறவில்லை. தமிழ் சினிமா இதுவரை ஒரு 100 கோடி ரூபாய் படத்தை கூட ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை.

பல தியேட்டர்கள் ஒரு காட்சிக்கு 15 பேர் வரவில்லை என்றால் அந்தக் காட்சியை ரத்து செய்து வந்த அவலங்களும் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது.

இதையும் படிங்க: வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்கு!.. சந்துல சிந்து பாடிய பிரபலம்!..

கமலா சினிமாஸ் கில்லி ரீ ரிலீஸ் படத்தை மிகப்பெரிய அளவில் கச்சேரியை போலவே தினந்தோறும் நடத்தி வருகின்றனர். கில்லி படத்தில் நடித்த பிரபலங்கள் ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் சென்று படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கமலா தியேட்டருக்கு கில்லி படத்தில் விஜய்யின் தங்கச்சியாக நடித்த அரிசி மூட்டை ஜெனிபர் பங்கேற்று ரசிகர்களுடன் ஆடிப்பாடி கொண்டாடினார்.

உங்களைப் போலவே தளபதியை பெரிய ஸ்கிரீனில் பார்க்க நானும் ஆவலுடன் வந்திருக்கிறேன் என மேடை ஏறி பேசிய ஜெனிஃபர் கில்லி சூட்டிங் சமயத்தில் தளபதி விஜய் தன்னிடம் அடிக்கடி பேச சொல்லிக் கேட்கும் வசனம் எதுவென்றால், “டேய் பதில சொல்லுடா” என்கிற வசனம் தான் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வரிசையா படங்களை முடித்துத் தள்ளும் கீர்த்தி சுரேஷ்!.. விஜய் அட்மின் படமும் ரெடியாகிடுச்சாம்!..

கில்லி படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த ஜெனிபர் சின்னத்திரையில் நடிகையாக சில சீரியல்களில் நடித்தார். பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

மீண்டும் திரையரங்குகளில் கில்லி படத்தையும் அவரது அரிசி மூட்டை கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுவதை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ் போட்டா எப்படி?!.. ரசிகர்களையே கூச்சப்பட வைக்கும் ராஷி கண்ணா!..

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C6YeIQjSOe4/

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.