Cinema News
நான் வாந்தி எடுத்ததை நானே சாப்பிடனுமா? இயக்குனரிடம் கத்திய இளையராஜா.. ஒரு பாட்டு கேட்டது தப்பா?
Music Director Ilaiyaraja: சினிமாவை பொறுத்தவரைக்கும் பல லெஜெண்ட்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர், சிவாஜி போன்ற உயர்ந்த நடிகர்கள் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் அவர்கள் நடித்த படங்களின் மூலம் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே போல்தான் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றென்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கப் போகின்றன. அவரை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எல்லாம் ஒரே நிமிடத்தில் அவரின் இசை மறக்க செய்கின்றன.
இதையும் படிங்க: விஜய் இத மாத்தலைனா நான் கண்டிப்பா கேள்வி கேட்பேன்.. ஆரம்பமே அமர்க்களம்தான் போல
அவர் எப்படி வேண்டுமென்றாலும் இருந்துட்டு போகட்டும். ஆனால் அவரின் இசை காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் மத்தாப்பு மற்றும் தினந்தோறும் போன்ற படங்களை இயக்கிய நாகராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இளையராஜாவை பற்றி கூறியிருந்தார்.
நாகராஜன் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரும் கூட. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நின்றவர். இவர் ‘ஆகாயம்’ என்ற பெயரில் முரளியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தாராம்.
இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்த முடிச்சி விட்டாங்கப்பா.. பாக்கியாவுக்கு தான் இதிலும் சோதனையா?
படத்திற்கு இசை இளையராஜா. அதனால் அவரிடம் கதை சொல்ல நாகராஜன் இளையராஜா வீட்டிற்கு செல்ல கதை முழுவதையும் கேட்டுவிட்டு நான்கு டியூன்கள் போட்டாராம் இளையராஜா. ஆனால் அவை எல்லாம் நாகராஜனுக்கு பிடிக்கவில்லையாம். உடனே இளையராஜா ‘இதில் என்ன உனக்கு பிடிக்கவில்லை’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு நாகராஜன் ‘என்னை தாலாட்ட வருவாளா’ மாதிரி ஒரு டியூன் வேண்டும் என சொல்ல உடனே இளையராஜா ஹார்மோனிய பெட்டியை மூடிவிட்டு ‘ நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்கிறாயா’ என கோபத்துடன் கேட்டு அப்படியே வெளியே நடந்து விட்டாராம்.
இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..
கொஞ்ச தூரம் நடந்த பின் நாகராஜனை அழைத்து இளையராஜா பழைய சில விஷயங்களை பேசி மறுபடியும் டியூன் போட்டு கொடுத்தாராம். இது நாகராஜனுக்கு பிடித்ததும் ‘உதாரணமா என எதையும் சொல்லாதே. டியூனில் எதாவது பிரச்சினை என்றால் மட்டும் சொல்’ என சொல்லி பாட்டை கொடுத்தாராம்.