பொங்கல் ரிலீஸாக கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில். ஜீவா நடிப்பில் வெளியான இந்தப் படத்தை நிதிஷ் சஹாதேவ் இயக்கியுள்ளார். ஒரு வித்தியாசமான கதை. சமீபகாலமாக அடிதடி, சண்டை இவற்றிலேயே ஊறி போன மக்களுக்கு புது அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. ஃபேமிலியோடு ஒரு படத்தை சந்தோஷமாக பார்க்கணும் என்றால் அதற்கு இந்தப் படம் பெஸ்ட்.
படம் பார்த்த அனைவரும் படத்தை பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஹீரோ என்றாலே மாஸ், ஆக்ஷன் இது போன்ற காட்சிகள் இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான நடிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக இருந்தாலும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். அதுவே படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கின்றன.
இந்த நிலையில் படத்தின் வெற்றி குறித்து படத்தில் நடித்த இளவரசு அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இளவரசு மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்கள். அவர்களை சுற்றித்தான் படமே டிராவல் செய்கிறது. இந்த நிலையில் படத்தை பற்றி இளவரசு கூறியதாவது:
ஊடகத்திற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு கிடைத்த பெரிய வெகுமதி. இது ஒரு புது முயற்சி. ஒரு ஹீரோனா அந்த ஒரு இலக்கணம், அடிதடி, சண்டை அப்படினு எதுவும் இல்லாமல் அதுவும் ஒரு கேரக்டர் ஆகி எல்லா கதாபாத்திரத்துடனும் அந்த கேரக்டர் பயணப்பட்டால் வெற்றி பெறும் என்பதற்கு பல படங்கள் உதாரணம். அதில் பொங்கலுக்கு ரிலீஸான இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் பெரும் உதாரணம் என்று இளவரசு கூறியிருக்கிறார்.
மேலும் இது மக்களால் அங்கீகரிக்கப்பட்டதும் வணிக ரீதியாகவும் எங்களுக்கு பெரிய வெற்றியானது மேலும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னுடன் தனிப்பட்ட கருத்து என்னவெனில் சினிமா என்பது சந்தோஷப்படுத்தணுமே தவிற கருத்து சொல்லும் படமாக இருக்க கூடாது என விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.




