'நீலோற்பம் நீரில் இல்லை...' இந்தியன் 2ல் தெறிக்க விட்ட ரொமான்டிக் சாங்கோட ஹைலைட்டே இதுதான்..!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பாரா சாங் பர்ஸ்ட் சிங்கிளில் வெளியாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இன்று செகண்ட் சிங்கிள் நீலோற்பம் நீரில் இல்லை என்ற ரொமான்டிக் சாங் வெளியாகி உள்ளது. அனிருத்துக்கு இந்தப் பாடல் ஒரு அருமையான காதல் மெலடி என்றே சொல்ல வேண்டும்.

சித்தார்த், ரகுல் பிரீத்திசிங் காதல் ஜோடிக்குக் கொடுக்கப்பட்ட பாடல் இது. ஸ்டைலான சித்தார்த்தைப் பார்க்க முடிகிறது. அவருடன் ரகுல் பிரீத்திசிங்கின் காதல் சேட்டைகளையும் பார்க்க சுவாரசியமாக உள்ளது. பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். அப்பி வி மற்றும் ஸ்ருதிகா சமுத்ராலா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன நீலோற்பம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. நீலோற்பம் என்றால் நீல நிற அல்லி மலரைக் குறிக்கிறது. இது இலங்கையின் தேசிய மலர் என்றும் சொல்லப்படுகிறது. பாடலில் அந்த மலரை அடிக்கடிக் காட்டுகின்றனர்.

Indian 2

Indian 2

'நீலோற்பம் நீரில் இல்லை... ஏன் தாண்டினாய் எல்லை... இனி ஏதும் தடங்கல் இல்லை... எப்போதும் நெஞ்சில் தொல்லை... தூக்கங்கள் உன்னில்லை... இதை மீறி புகார்கள் இல்லை..., நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும், எறிந்திடும் காற்றில் முத்தங்கள் வந்தாக வேண்டும்' என்று காதலை உரிமையுடன் கேட்டு வாங்குவதாகப் பாடல் வரிகள் அழகுற அமைந்துள்ளன.

தொடர்ந்து 'மாறா மனம் இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன, தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன' என்று சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. இதுதான் பாடலின் ஹைலைட்.

இதையும் படிங்க... லெஜண்ட் சரவணாவோட அடுத்த படம் இதுக்காகத்தான் பண்றேன்!.. ஓப்பனா பேசிய கருடன் பட டைரக்டர்!..

தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி ஆடியோ லாஞ்சும், ஜூன் 7 ம் தேதி இந்தியன் முதல் பாகத்தின் ரீ ரிலீஸ், அதையடுத்து ஜூலை 12ல் இந்தியன் 2 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள், புரோமோவை படக்குழுவினர் முடுக்கி விட்டு இருக்கிறார்கள். இந்தியன் தாத்தா, இந்தியன் 2ல் என்ன செய்யப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles
Next Story
Share it