பிகிலா? TN 2026-ஆ? எதுல அதிக சம்பளம்? சீக்ரெட்டை பகிர்ந்த பாண்டியம்மா!

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. சின்னதிரையின் மூலம் அறிமுகம் ஆன அவர் வெள்ளிதிரையிலும் முத்திரை பதித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர் தமிழ் சீசன்

indraja sankar

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. சின்னதிரையின் மூலம் அறிமுகம் ஆன அவர் வெள்ளிதிரையிலும் முத்திரை பதித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர் தமிழ் சீசன் 1’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டு தனது திறமையை காண்பித்தார். அதுமட்டுமின்றி விஜய் டிவியின் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மூலம் திரையுலகில் அறுமிகம் ஆனார். இதில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது உடல்வாகை கேலி செய்வோருக்கு பதிலடி கொடுக்கும் படியான அந்த கதாபாத்திரமும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. இதனை அடுத்து பாகல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். கார்த்தி நடித்த விருமன், கூரன் மற்றும் அகத்தியா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சமீபத்தில் வெளியான TN 2026 படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிகில் படாத்தில் தான் வாங்கிய சம்பளம் என்ன என்பதை கூறியுள்ளார். அவர் கூறுகையில், விஜய் சாரோட பிகில் படத்தில் நான் 6 மாதம் வேலை செய்தேன். சம்பளம் முக்கியம் இல்லை. விஜய் சார் மாதிரி ஒரு நடிகர் கூட வேலை செய்கிற அனுபவம் முக்கியம். அதனால் சம்பளத்தை எதிர்பார்க்காமல் வேலை செய் என்று என் அப்பா கூறினார். 6 மாதம் வேலைக்கு ரூ. 3 லட்சம் கொடுத்தாங்க. ஆனால் TN 2026 படத்தில் ஒரு நாள்தான் ஷீட்டிங்க்கு போனேன். ரூ.40000 கொடுத்தாங்க என்றார்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →