தளபதிக்கு கிராமத்து கதை சொன்ன ரத்னகுமார்.. நூலிழையில் மிஸ்ஸானது எப்படி?

X
தளபதிக்கு கிராமத்து கதை சொன்ன ரத்னகுமார்.. நூலிழையில் மிஸ்ஸானது எப்படி?

தளபதி விஜய்க்கு தான் ஒரு கதை சொன்னதாகவும், ஆனல அது தொடர்வில்லை என்றும் இயக்குனர் ரத்னகுமார் கூறியுள்ளார்.

மேயாதமான் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவ்ர் ரத்னகுமார். தொடர்ந்து ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் அறியப்படும் அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு கதை இலாக்காவிலும் பண்டியாற்றி வருகிறார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல்ஹாசனின் இண்டஸ்ட்ரி ஹிட் படமான ‘விக்ரம்’, மற்றும் விஜய்யின் ‘லியோ’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களுக்கு ரத்னகுமார் இணை எழுத்தாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 29 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ரத்னகுமார் தீவிர விஜய் ரசிகராவார். சமீபத்தில் இவர் தளபதி விஜய்க்கு தான் ஒரு கிராமத்து கதை சொன்ன சுவாரஸ்யமான சம்பவத்தையும், அந்தப் படம் எப்படி நூலிழையில் கைநழுவிப் போனது என்பது குறித்தும் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ரத்னகுமார், தளபதி விஜய் சாரை முழுநீள வேட்டி சட்டையில், ஒரு பக்கா கிராமத்து பின்னணியில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்றது போல ஒரு பக்கா கிராமத்து கதையை நான் விஜயிடம் கூறினேன். கதையைக் கேட்ட விஜய்க்கும் அந்த ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துப் போயுள்ளது. ஆனால் அந்த நேரத்தில்தான் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த வாரிசு’ படத்துக்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியது. அந்தப் படம் பெரிய பட்ஜெட்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உடனடியாகத் துவங்கப்பட இருந்ததால், விஜய் அந்தப் ப்ராஜெக்ட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு என்னுடைய சினிமா பயணமும் வேறு பக்கம் சென்றுவிட்டது. தற்போது விஜய் சாரும் திரைப்படங்களில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்குச் சென்றுவிட்டார். இதனால் அந்தப் படம் நடக்காமலேயே போய்விட்டது என ரத்னகுமார் கூறியுள்ளார்.