விளம்பரத்துல நடிச்சும் காசு வரலயே!.. கடுப்பாகி நோட்டீஸ் அனுப்பிய அஜித்!…
அஜித் விளம்பர பட அப்டேட்

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே கார் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எனவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அவரின் அடுத்த படத்தின் ஷுட்டிங் தற்போதுவரை துவங்கப்படவில்லை. அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனது.
ஆனால் அஜித் கேட்ட 185 கோடி சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வராததால் ஒரு கட்டத்தில் தானே அந்த படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு அஜித் வந்தார். அதன்பின்னரே டேர் டெவில் என்கிற தலைப்போடு பட அறிவிப்பு வெளியானது.
ஒருபக்கம், தனது கார் ரேஸ் நிறுவனம் மற்றும் படத்தை தயாரிப்பது ஆகிய செலவுகளுக்கு பணம் தேவை என்பதால் அஜித் விளம்பர படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே கேம்பகோலா குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். ஆனால் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை..
அதோடு ரியல் எஸ்டேட் நிறுவனமான NOVA நிறுவனத்தின் விளம்பர படத்திலும் அஜித் நடித்துள்ளார். இதற்காக அஜித்துக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் போது இந்த விளம்பர படத்தில் நடிக்கும் போது NOVA நிறுவனத்தின் பெயரை நான் எங்கேயும் சொல்ல மாட்டேன் என கண்டிஷன் போட்டுவிட்டுதான் அஜித் அந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த விளம்பர படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார்.
அஜித்துக்கு முதலில் ரூ.20 கோடி அட்வான்ச் கொடுத்துவிட்டு விளம்பரம் வெளியானதும் ரூ.20 கோடி கொடுக்கிறோம் என நோவா நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால், அஜித் அந்த விளம்பர பட்த்தில் நடித்து 6 மாதங்களாகியும் விளம்பரத்தை வெளியிடவே இல்லை. பொறுத்து பொறுத்து கடுப்பான அஜித் சமீபத்தில் நோவா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து NOVA நிறுவனம் அஜித் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பு தொடங்கியிருக்கிறதாம்.












