ரஜினிக்கெல்லாம் வில்லனா நடிக்க முடியாது… மறுத்த நடிகருக்கு ஒரு சூப்பர் சான்ஸ் கொடுத்த ஏவிஎம்
Rajinikanth: பொதுவாகவே 90ஸ்களில் ரஜினிகாந்த் படங்களில் அவருக்கு வில்லனாக அப்போது ஹிட்டாகும் இருக்கும் ஒரு ஹீரோவே களமிறங்குவார். அப்படி ஒரு லிஸ்ட்டின் ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்பாவை போலவே மகனுமா என்கின்றனர் ரசிகர்கள்.
நடிகராக இருந்த முத்துராமனை வில்லனாக்கியது ரஜினிகாந்த் படத்துக்கு தான். அப்படி அவரின் மகன் கார்த்திக்கை ஒரு படத்துக்கு வில்லனாக கேட்கின்றனர். அவரோ அச்சோ நானே இப்போ ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். என் கேரியரை கெடுத்துக்க முடியாது என முரண்டு பிடித்தாராம்.
இதையும் படிங்க: விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!
அந்த படம் தான் நல்லவனுக்கு நல்லவன். விசு கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படத்தினை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ரஜினி, கார்த்திக், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் வயதான வேடத்தில் ரஜினியும், அவர் மகளை காதலிக்கும் வேடத்தில் கார்த்தியும் நடித்திருப்பார்.
இருவரின் ஈடுபாடும் படத்தில் ஹைலைட் என்றே சொல்லலாம். முதலாளியான விசு தன் சொத்தை தொழிலாளியான ரஜினிகாந்திடம் கொடுத்து விடுவார். விசு எவ்வளவு நல்லவரோ, அவ்வளவு கெட்டவர்கள் அவரது குடும்பத்தினர். அவரின் மகனாக வந்து ரஜினியை பழிவாங்கும் வேடத்தில் தான் கார்த்திக் நடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘லியோ’ படம் ஒன்னும் சும்மா ஓடல! அதுக்கு பின்னாடி இருந்தது இவங்கதான்.. பிரபல இயக்குனர் பகீர்
இந்த கதாபாத்திரம் வலுவானது என்பதால் ஹீரோவையே வில்லனாக்க இந்த முறையும் ஏவிஎம் திட்டமிட்டது. அதன்படி கார்த்திக்கிடம் போய் கேட்டு அவர் முரண்டு பிடிக்க அவரை சம்மதிக்க வைக்க ஒரு யுக்தியை கையாண்டார்களாம். அதாவது நீங்க ஹீரோவாக நடிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம் தானே.
உங்களை ஹீரோவாக வைத்து நாங்களே ஒரு படம் இயக்குகிறோம். அந்த படத்தினை எஸ்.பி.முத்துராமனே இயக்கட்டும் எனக் கேட்க நிச்சயமா கொடுப்பீங்களா? எனத் தயக்கமாக கேட்டாராம். அப்போது, ஏவி.எம்ல எதையும் சொல்ல மாட்டோம். வாக்கு கொடுத்துட்டா நிச்சயம் அதிலிருந்து பின் வாங்கவே மாட்டோம் என ஏவிஎம் சரவணன் கொடுத்த உறுதிக்காகவே சம்மதித்தாராம் கார்த்திக்.