---Advertisement---

பஞ்சதந்திரம் மேகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

Published on: March 20, 2026
panjathanthiram movie
---Advertisement---

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி திரைப்படங்களின் பட்டியலை எடுத்தால், அதில் கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிகுமார் – க்ரேஸி மோகன் கூட்டணியில் 2002ம் ஆண்டு வெளியான பஞ்சதந்திரம் படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கிரேஸி மோனனின் வசனம் இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. குறிப்பாக முன்னாடி பின்னாடி , வைர மூக்குத்தி என டைமிங் காமெடி வசனக்கள் திரையரங்குகளையே சிரிப்பலையில் அதிர வைத்தன. இன்று வரை தொலைக்காட்சிகளிலும், யூடியூபிலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்தப் படத்தில், மேகி என்ற என்ற ரம்யா கிருஷ்ண பாத்திரம் முக்கிய பங்கிருக்கும்.

ஆனால், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர் இல்லையாம்! இது குறித்த சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அவ்ர் கூறுகையில்,

பஞ்சதந்திரம் படத்தில் முக்கிய பங்கு மேகி கேரக்டருக்கு உண்டு. படத்தின் கதை ஒருகட்டத்தில் மேகி கேரக்டரை மையமாக வைத்தே செல்லும். அந்த் அளவிற்கு அந்த வேடம் முக்கியமானதாக இருந்தது முதலில் மேகி கதாபாத்திரத்திற்காக நடிகை நக்மாவைத்தான் நடிக்க வைக்க முடிவு செய்தோம். அதே தேர்வில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இருதார். ஆனால், அந்த நேரத்தில் ரம்யா கிருஷ்ணன் சற்று உடல் எடை கூடி, குண்டாகக் காணப்பட்டார். மேகி கதாபாத்திரம் மிகவும் ஸ்லிம்மான,மாடர்னான தோற்றத்தை கொண்டதால் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

ஆனால் இந்த வேடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரம்யா கிருஷ்ணன், வெறும் ஒரே மாதத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையைக் குறைத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். பொதுவாகப் பெண்களுக்குப் பின்புற உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், ரம்யா அதையும் ஒரு மாதத்தில் குறைத்துத் திரும்பி வந்தார். அதன்பின்னரே ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்தோம் என்று கூறினார்.