Home latest news மெகா கூட்டணியால இருக்கு! தனுஷ் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. ஹைப் ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க

மெகா கூட்டணியால இருக்கு! தனுஷ் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. ஹைப் ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க

mammooty

தனுஷ் தற்போது கரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இதனை தொடர்ந்து தனுஷ் 55வது படத்தினை அமரன் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் RTake Studios இணைந்து தயாரிக்கின்றன. (முதலில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவே அவர் விலகிகொண்டார். இப்படதிற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

டி 55ல் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்கள். மாரி 2 படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் சாய் பல்லவி இணைகிறார். இன்னொரு நாயகியாக பராசக்தி பட நாயகி லீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இப்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மெகாஸ்டார் மம்முட்டி நடிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவிஅன்ர் இன்று வெளியிட்டுள்ளனர். மம்முட்டி இணைவதன் மூலம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleKarthi: அண்ணன் இறங்குவாருனு பார்த்தா? தம்பி மாஸ் காட்டுறாரே.. குதிரையில் பறக்கும் கார்த்தி
Next articleVaranasi: வாரணாசி படத்தில் என் கேரக்டர் வேறலெவல்!. ஹைப் ஏத்தும் மகேஷ் பாபு!..