டைரக்சன் ஊத்திக்கிச்சி!.. மீண்டும் தப்பு பண்ணும் ஜேசன் சஞ்சய்!.. சரியா வருமா?…

X
டைரக்சன் ஊத்திக்கிச்சி!.. மீண்டும் தப்பு பண்ணும் ஜேசன் சஞ்சய்!.. சரியா வருமா?…

முன்னாள் நடிகர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவைப் போல சினிமாவில் நடிக்க வருவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த 2ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. ஆனால் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு இந்த படம் நஷ்டம் என சொல்லப்படுகிறது.

எனவே, அடுத்து ஒரு புதிய படத்தில் நடிகராக களமிறங்க ஜேசன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை நடிகர் விக்ராந்தின் சகோதரரும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான சஞ்சீவ் இயக்கவிருக்கிறாராம். இவர் ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தை இயக்கிய போது அந்த படத்தில் அசோசியேட் இயக்குனராகவும் சஞ்சீவ் பணிபுரிந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், சுமார் ரூ.35 கோடி செலவில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனராம்.

விஜயின் மகனாக இருந்து கொண்டு சினிமாவில் நடிகனாக அறிமுகமாகும் போது பிரபலமான ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடிக்காமால் உறவினர் என்கிற ஒரே காரணத்துக்காக தோல்வி படத்தை கொடுத்த சஞ்சீவின் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் நடிக்க முடிவெடுத்திருப்பது விஜய் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.