நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர், சமீப காலமாக ‘இரும்புத்திரை, விடாமுயற்சி’ போன்ற படங்களில் வில்லனாக வலம் வந்தார்.
இதுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, ‘பிளாஸ்ட்’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டி விட்டார். இந்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆன இந்த படத்தை சுபாஷ்.கே.ராஜ் இயக்கினார்.

இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று விட்டது. இதற்கு முன்புவரை அர்ஜுன் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்தார்.
தற்போது, இவர் ‘பிளாஸ்ட்’-டின் வெற்றியால் தனது சம்பளத்தை டக்கென உயர்த்தி விட்டார். புதிதாக கமிட்டாகும் படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறாராம்.







