சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த Scene படத்தின் ஆதி இவ யார்ரா பாடல்!

X
சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்த Scene படத்தின் ஆதி இவ யார்ரா பாடல்!

பொதுவாகவே நம்ம ஹீரோக்கள் வழக்கமாக நடிக்கும் படங்களை விட, அவர்கள் போலீஸ் ஆக வலம் வரும் படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கும். அப்படி தான் ‘சீன்’ படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா காக்கி சட்டை அணிந்து போலீஸ் ஆக நடித்திருக்கிறார். நஸ்ரியா தான் நம்ம சூர்யாவுக்கு ஜோடியாம்.

ஆல்ரெடி வெளியான இதன் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, சுஷின் ஷ்யாம் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘ஆதி இவ யார்ரா’ ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்பாடல் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.