விஜய் சேதுபதிக்கு பாதி சம்பளத்த கூட கொடுக்காத மணிரத்னம்!.. இஞ்சி வெல்லம் அப்டேட்!…

X
விஜய் சேதுபதிக்கு பாதி சம்பளத்த கூட கொடுக்காத மணிரத்னம்!.. இஞ்சி வெல்லம் அப்டேட்!…

கோலிவுட் மட்டுமல்லாமல் இந்திய சினிமா அளவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். ரோஜா, பம்பாய், தளபதி, நாயகன், அலை பாயுதே, பொன்னியின் செல்வன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர். ஒருபக்கம் தீவிரவாதத்தை தோலுரித்தி காட்டிய மணிரத்னம் ஒருபக்கம் பீல் குட் காதல் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மணிரத்தினம் போல காதல் படத்தை எடுக்கும் இயக்குனர்கள் இந்திய அளவில் யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. ஆனால், கமலை வைத்து அவர் இயக்கிய தக் லைப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து இஞ்சி வெல்லம் என்கிற திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கி வருகிறார்.

பொதுவாக மணிரத்தினம் இயக்கத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என எல்லா நடிகர்களும் ஆசைப்படுவார்கள். அதன் காரணமாக அந்த நடிகர் என்ன சம்பளம் வாங்குகிறாரோ அதில் பாதியை மட்டுமே மனிரத்னம் கொடுப்பார் என திரையுலகில் சொல்வதுண்டு..

விஜய் சேதுபதி தற்போது 15 கோடி சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் வெளியான அவரின் பத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அநேகமாக அவருக்கு சம்பளத்தை 20 கோடியாக அவர் உயர்த்தி விட உயர்த்தி விடுவார் ஆனாலும் இஞ்சி வெல்லம் படத்தில் நடிக்க அவருக்கு மணிரத்னம் 6 கோடி மட்டுமே சம்பளமாக கொடுத்திருக்கிறாராம்.

ஆனாலும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ‘மணி சார் காதல் திரைப்படங்களை அற்புதமாக எடுப்பவர்.. அவரின் இயக்கத்தில் அப்படி ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.. இந்த படம் மூலம் அது நிறைவேறியிருக்கிறது’ என்கிறார் விஜய் சேதுபதி.