தோல்வியடைந்த Sigma… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கப்போவது இவரா?

X
தோல்வியடைந்த Sigma… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கப்போவது இவரா?

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த ‘தளபதி’ விஜய் தான் இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிக்மா’.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த இப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் தோல்வி படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.

தற்போது, இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஹீரோ அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஜேசனின் சித்தப்பாவும், ‘தாக்க தாக்க’ படத்தின் இயக்குநருமான சஞ்சீவ் இயக்கப்போகிறாராம்.

இந்த படத்தையும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமே தயாரிக்கப்போகிறது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போகும் இப்படத்தின் ஹீரோ ஜேசன் சஞ்சய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.10 கோடியாம்.