ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். நாட்டில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட தியாகி வெகுண்டு எழுந்து களை எடுப்பதை படத்தின் கதை திரைக்கதையாக ஷங்கர் அமைத்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் 26 வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் கிரிஞ்சாக இருந்ததால் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது..
ஒருபக்கம், இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்கும்போதே இந்தியன் 3 படத்திற்கான பெரும்பாலான காட்சிகளை ஷங்கர் எடுத்துவிட்டார். இந்தியன் 2 வெளியான தியேட்டர்களிலேயே இந்தியன் 3 தொடர்பான டீசரும் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இந்தியன் 2 தோல்வி அடைந்ததால் இந்தியன் 3 கிடப்பில் போடப்பட்டது. கமல்ஹாசன் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். ஷங்கரோ வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில்தான், இந்தியன் 3 படத்தின் புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே கமலுக்கே தெரியாமல்தான் லைக்கா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சொல்கிறார்கள். ஏனெனில் கமல், ஷங்கர், அனிருத் ஆகிய மூன்று பேருக்குமே சம்பள பாக்கி இருக்கிறதாம். இந்தியன் 3 தொடர்பாக இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது.
கமலுக்கு சம்பளம் கொடுத்தால்தான் அவர் நடித்துக் கொடுப்பார்.. டப்பிங்கும் பேசுவார். அதேபோல் ஷங்கருக்கு படத்தை முடித்துக் கொடுப்பார். அனிருத்தும் பின்னணி இசையை முடித்துக் கொடுப்பார். ஆனாலும், யாரிடம் எதுவும் சொல்லாமலேயே லைக்கா நிறுவனம் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது.
ஒருவேளை கழகம் பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல போஸ்டரை வெளியிட்டால் எல்லா பிரச்சனைகளும் அதுவாக தீர்ந்துவிடும் என லைக்கா நிறுவனம் நினைத்திருக்கலாம். ஏனெனில், இந்தியன் 3 படத்தில் பல கோடிகள் முடங்கியிருக்கிறது.







