அரசன் படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி?… வெற்றிமாறன்தான் காரணமா?…

X
அரசன் படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி?… வெற்றிமாறன்தான் காரணமா?…

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என அடித்து ஆடினார். தற்போது சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை முடியவில்லை. அதற்கு காரணம், ஒருபக்கம் ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கென் கருனாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்..

ஒருபக்கம், அரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்ட நிலையில், தற்போது அரசன் படத்திலிருந்து விலகி விடலாம் என்கிற முடிவுக்கு விஜய் சேதுபதி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் இந்த படத்திற்காக பல நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்தும் அதை வெற்றிமாறன் பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். அதோடு மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. தற்போது பத்தா படம் ஹிட் அடிடுத்திருப்பதால் தொடர்ந்து மற்ற படங்களில் விஜய் சேதுபதி கவனம் செலுத்தவிருக்கிறார்.

எனவே வெற்றிமாறனிடம் சொல்லிவிட்டு அரசன் படத்திலிருந்து விலகிவிடலாம் என விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து அவர் விலக அவருக்கு பதில் அமீர் நடித்தார். தற்போது அசுரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவெடுத்திருக்கிறார்.