சீமானை விஜய் கழட்டிவிட இதுதான் காரணம்!.. இவ்ளோ நடந்திருக்கா?…

X
சீமானை விஜய் கழட்டிவிட இதுதான் காரணம்!.. இவ்ளோ நடந்திருக்கா?…

நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் அரசியல் கட்சி தொடங்கியதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றார். அதோடு விஜய் தம்பி என்னுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருந்தால் வரவேற்பேன் எனவும் பேட்டி கொடுத்தார்..

ஆனால் விஜய் திராவிடத்தை எதிர்க்காததால் சீமான் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து தவெகவினர் சீமானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.. சீமானின் விமர்சனங்களுக்கு விஜய் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை. தனது எதிரி திமுக மட்டுமே என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சீமான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். அவர் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் அவர் தோல்வியடைந்தார்.. அதோடு நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியும் குறைந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா மற்றும் அரசியல் விமர்சிகர் வலைப்பேச்சு பிஸ்மி ‘விஜய்க்கு சீமானுடன் இணைந்து பயணிக்க விருப்பம் இருந்தது. ஒருமுறை சீமானை சந்தித்து இரண்டு மணி நேரம் அவர் ஆலோசனை நடத்திவிட்டு சீமானை தனது காரிலேயே அவரின் வீட்டில் இறக்கி விட்டு சென்றார் விஜய்.

ஆனால், பாமகவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, விஜய் ரசிகர்களின் ஆதரவுடன் தான் முதலமைச்சராக வேண்டும் என சீமான் கணக்கு போட்டார். இது விஜய்க்கு தெரிந்து விடவும் சீமானை கழட்டி விட்டு விட்டார். அதன் பிறகுதான் சீமான் விஜயை திட்ட தொடங்கினார்’ என அவர் கூறியிருக்கிறார்.