Cinema History
சூப்பர்ஸ்டாரின் முதல் காதல்!.. ரஜினி நடிகராவதற்கு காரணமே அவங்கதானாம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..
நடிகர் ரஜினி சினிமா உலகில் எவ்வளவு உயரைத்தை அடைந்திருக்கிறார்.. அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்திய அளவில் ஒரு பெரிய நடிகராக ரஜினி இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பானில் கூட இவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
பல நடிகர்கள் வந்தாலும், பல வெற்றிகளை கொடுத்தாலும்.. கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும் பல வருடங்களாக ரஜினி வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாராலும் பறிக்க முடியவில்லை. இனிமேலும் அந்த பட்டத்தை யாராலும் பறிக்கவும் முடியாது. ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்க இருந்த முரட்டுக்காளை திரைப்படம்… ஒரு நொடியில் சுதாரித்த ரஜினிகாந்த்!…
நடிகர் ரஜினி சினிமாவில் நுழைந்ததற்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. பலருக்கும் தெரிந்த செய்தி ரஜினியிடம் நடிப்பின் மீது ஆர்வத்தை தூண்டியவரும், அவர் சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் சேர்வதற்கு உதவி செய்ததும் அவரின் நண்பர் ராஜ்பகதூர் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அதற்கு பின்னால் ஒரு காதல் இருக்கிறது.
பெங்களூரில் ரஜினி பேருந்தில் நடத்துனராக வேலை செய்தபோது அவரின் பேருந்தில் நிர்மலா என்கிற பெண் தினமும் செல்வாராம். அவர் ஒரு மருத்துவரும் கூட. பேருந்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது மலை நேரங்களில் நாடகங்களில் நடித்து வந்த ரஜினி ஒருநாள் நிர்மலாவை தான் நடிக்கும் நாடகத்தை பார்க்க வர சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்காத அந்த பல்கலைக்கழகம்!.. காரணம் இதுதானாம்!..
நாடகத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்து வியந்த நிர்மலா ‘நீ கண்டிப்பாக சினிமாவில் நடித்தால் பெரிய நடிகராக வருவாய்’ எனக்கூறியிருக்கிறார். மேலும், அவரிடம் சொல்லாமலேயே சென்னையில் இருந்த நடிப்பு கல்லூரியில் ரஜினிக்காக அட்மிஷன் விண்ணப்பத்தை எழுதி போட்டுவிட்டார். ஒருநாள் ரஜினியின் வீட்டுக்கு நடிப்பு கல்லூரியிலிருந்து ஒரு கார்டு வந்தது. அதை எடுத்துகொண்டு அந்த பெண்ணை போய் பார்த்தார் ரஜினி. அப்போதுதான் அது அந்த பெண் செய்த வேலை என்பது தெரியவந்தது.
அதன்பின் அந்த பெண் ரஜினி கையில் பணமும் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்படித்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் ரஜினி. அதேநேரம், ரஜினிக்கு மாதா மாதம் செலவுக்கு அவரின் நண்பர் ராஜ்பகதூர் பணம் அனுப்பியிருக்கிறார். பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகராக மாறினார் ரஜினி. ஆனால், நிர்மலா என்கிற அந்த பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…