ரஜினிகாந்த நடிக்க வைக்க போராடிய இயக்குனர்… காதல் கதைக்கு நோ சொன்ன சூப்பர்ஸ்டார்!...
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் படம் ஹிட் என்பது உறுதி தான். அந்த ஐடியாவை கையில் எடுத்த இயக்குனர் அவரை நடிக்க வைக்க போராடிய நிலையில் கடைசியில் அவரே ஹீரோவாக சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சின்ன கேரக்டர், ஒற்றை சீனில் மட்டுமே வந்து போன டி.ராஜேந்தர் நடித்த முதல் திரைப்படம். எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்தார். தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி அப்படத்தினை தான் முதன்முதலில் தயாரிக்கவும் செய்தார்.
இதையும் படிங்க: செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!…
அப்படம் தான் உயிருள்ளவரை உஷா. தன்னுடைய காதலை மையமாக வைத்து காதலிக்காக உருவாக்கிய திரைப்படம். ஹீரோவாக ரஜினியை நடிக்க வைக்கவே விரும்பினார். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இன்னொரு ஹீரோவை கேட்டு போய் அழைவதை டி.ராஜேந்தருக்கு சரியாக படாமல் போனது.
இதனால் அந்த கேரக்டரில் இவரே நடிக்கும் முடிவை எடுத்தார். அப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க வந்தார். படம் வெளிவர பெரிய போராட்டம் நடந்தது. இருந்தும் அப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் திரைப்படமாக அமைந்தது. 1980களில் இப்படம் ரிலீஸாகி இன்றளவும் காதலுக்கான அடையாள திரைப்படமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..