ஜெயிலர் படத்த பாதிக்கு மேல பார்க்க முடியல!.. அவர் கூடவ நடிச்சிட்டு இப்படி சொல்லலாமா?!...

Ramesh khanna: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, தமன்னா, மலையாள நடிகர் வினாயகன், மோகன்லால், சிவ்ராஜ்குமார், வசந்த் ரவி என பலரும் நடித்திருந்தனர். பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பின் நெல்சன் இயக்கிய படம் இது. அதேபோல், அண்ணாத்தே திரைப்படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ரஜினி நடித்த திரைபடம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

Update: 2023-11-08 06:18 GMT

Ramesh khanna: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, தமன்னா, மலையாள நடிகர் வினாயகன், மோகன்லால், சிவ்ராஜ்குமார், வசந்த் ரவி என பலரும் நடித்திருந்தனர். பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பின் நெல்சன் இயக்கிய படம் இது.

அதேபோல், அண்ணாத்தே திரைப்படம் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ரஜினி நடித்த திரைபடம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது, தமன்னா ஆடிய காவாலா பாடலும் இந்த படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது.

இதையும் படிங்க: தீபாவளி தினத்தன்று திரையரங்கை தெறிக்க விட்ட கமல், ரஜினி படங்கள் – அதிக வெற்றி யாருக்கு?

எனவே, இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது இந்த படம் ரூ.700 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது. எனவே, ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு சிறப்பு பரிசும், காரையும் கலாநிதி மாறன் பரிசளித்தார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகரும், படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்தவருமான ரமேஷ் கண்ணா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘இப்போதெல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பார்க்க முடிவதில்லை. எல்லாம் வெட்டு, குத்து, ரத்தமாக இருக்கிறது.

இதையும் படிங்க: மாயா அந்த மாதிரி பொண்ணு!.. அதவச்சி பல பேர மோசம் பண்ணிருக்கு… பிரபலம் சொன்ன தகவல்…

ஜெயிலர் படத்தை அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. முதல் காட்சியில் என்ன இருக்கிறதோ அதுதான் கடைசி காட்சியிலும் இருந்தது. ஆன் தி வே-ல மகனை கொல்கிறார் ரஜினி. இது தங்கப்பதக்கம் படத்துல சிவாஜி பண்ணியதுதான்’ என அவர் பேசியிருந்தார்.

சமீபகாலமாகவே ரசிகர்களும் ஆக்‌ஷன் கதைகளை அதிகம் ரசிக்க துவங்கிவிட்டனர். அதற்கு லோகேஷ் கனகராஜை ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்தது. இந்த படம் வெற்றியடையவும் நெல்சன் போன்ற இயக்குனர்களும் வன்முறைகளை கையில் எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் நடிகனாக காரணமே தல தான்… ரஜினி செய்யாததை செய்த அஜித்..! ராகவா லாரன்ஸ் சொன்ன ஆச்சரிய தகவல்..!

Tags:    

Similar News