என் டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சு!.. கோட் சூட்டில் மாஸ் காட்டும் சூரி!.. பெர்லின் விருது விழாவில் இப்போ!

நெதர்லாந்தில் சமீபத்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை 1 மற்றும் 2 படங்கள் திரையிடப்பட்டன. அங்கே பனி அதிகம் என்பதால் குளிர் உடைகளை அணிந்து போஸ் கொடுத்திருந்தார் சூரி.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் கொட்டுக்காளி படத்திற்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள சூரி கோட் சூட் அணிந்துக் கொண்டு தாறுமாறாக கொடுத்துள்ள போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜெயிச்சாரா ஜெயம் ரவி?.. சைரன் படத்துக்காவது தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தாங்களா.. 2 நாள் வசூல்?

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் பல விருதுகளை அள்ளிக் குவித்த நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரியை வைத்து இயக்கி உள்ள படம் தான் கொட்டுக்காளி.

அந்த படம் இன்னமும் இங்கு ரிலீஸ் செய்யப்படாத நிலையில், உலகளவில் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது. ”உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி!” என சூரி தற்போது போட்டோக்களை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான இத்தனை படங்கள் ஃபிளாப்பா?.. ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட்ல அந்த படம் தான் ஹிட்டா?

கோட் சூட்டில் சூரி இருப்பதை பார்த்த ரசிகர்கள் வடிவேலு, யோகி பாபு, சந்தானம் உள்ளிட்ட காமெடி நடிகர்களை ஓவர்டேக் செய்து விட்டு சென்றுக் கொண்டிருக்கிறாரே சூரி என பாராட்டி வருகின்றனர்.

 

Related Articles

Next Story