ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் பலவிதமான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் மட்டுமல்லாமல் பல விதமான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய விஜயும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
அவர் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே அவர் மீது பல விமர்சனங்களும் வைக்கப்பட்டது. இப்போது அவரின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. அதோடு ஒருபக்கம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளும் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒருபக்கம் விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போதிலிருந்து அவரின் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆவதில்லை. இத்தனைக்கும் விஜய்யின் சர்க்கார், பிகில் உள்ளிட்ட பல முக்கிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிதான் வைத்திருக்கிறது.
அரசியல் அழுத்தம் காரணமாகவே சன் தொலைக்காட்சிகளில் விஜய் படங்களை ஒளிபரப்புவதில்லை என சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை சோகப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் பல கோடிகள் கொடுத்து வாங்கி அதை ஒளிபரப்பாமல் வைத்திருந்தார்ல் நஷ்டம் சன் டிவிக்குதான். டிவியில் ஒளிபரப்பினால்தான் சன் டிவிக்கு வருமானமும் வரும். எனவே இதனால் விஜய்க்கு எந்த நஷ்டமும் இல்லை என்கிறார்கள் சிலர்.
ஒருபக்கம் ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் மாறும். அதேபோல் சன் டிவி எல்லா நேரமும் அரசியல் ரீதியாக செயல்படாது. சில நேரங்களில் அவர்கள் தன்னிச்சையாகவும் செயல்படுவார்கள்.. எனவே இதுவே நீடிக்கும் எனவும் சொல்ல முடியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.




