Connect with us

latest news

மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ரவி ஹோட்டலில் அவர் முதலாளி தன்னுடைய மகளை பொறுப்புக்கு மாற்றிவிடுகிறார். அப்போ ஸ்ருதி வர அந்த பெண் பாஸ் பேசுவதை கேட்டு கடுப்படிக்கிறார். பின்னர் ஸ்ருதி கிளம்பிவிடுகிறார். மீனா வீட்டுக்கு வர சத்யா நினைத்து புலம்புகிறார்.

ரோகிணியை பிஏ சந்தித்து 30 லட்சமா கொடுக்கணும் என்கிறார். என்னிடம் எப்படி அவ்வளோ பணம் இருக்கும் எனக் கேட்க நீதான் ஒரு வருஷமா வீட்டை ஏமாத்துற ஒழுங்கா இரண்டு நாளில் கொடுத்துடணும் என மிரட்டுகிறார். சிட்டியிடம் மீனா சண்டைக்கு வருகிறார். முதலில் அமைதியாக பேச பின்னர் சிட்டி மீனாவை தள்ளி விடுகிறார். முத்துவும் இந்த விஷயம் தெரிந்து சண்டைக்கு போகிறார்.

இதையும் படிங்க: ஓடிடி, சேட்டிலைட் எல்லாமே வீழ்ச்சி… வேட்டையன் படத்துக்கு 70 சதவீத லாபம் வந்தது எப்படி?

பாக்கியலட்சுமி தொடரில் கோபி போட்டோ திறக்கும் பங்ஷனில் ராமமூர்த்தியை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். இதனால் கடுப்பாக பாக்கியா நீங்களே ஒழுங்கான அப்பாவா இருக்கலை. மாமாவ பத்தி பேசாதீங்க என்கிறார். பின்னர் ராதிகாவிடம் பேசும் கோபி இனி குடிக்க மாட்டேன் என்கிறார்.

செந்தில் நீ ஏன் இப்படி செய்ற எனக் கேட்க எங்க அப்பா எனக்கு சரியில்லை. அவ என்ன நாடகம் போடுறானு தான் பார்க்க போனேன். என்னையே என் பிள்ளைக்கு சரியான அப்பா இல்லை என்கிறாள். எனக்கு அவ சர்டிபிகேட் கொடுக்கணும் என அவசியமில்லை என்கிறார். என்னை தனியா நிக்க வச்ச மாதிரி பாக்கியாவையும் நிக்க வைக்கணும் என்கிறார்.

இதையும் படிங்க: தக் லைஃப்ல லீக்கான அந்த மூணு விஷயங்கள்… ஹைப்பை அள்ளும் ஹைலைட்டுகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் சரவணன் காசுக்கு யோசித்து கொண்டு இருக்க ஏன் இந்த பிரச்னை என தங்கமயில் கேட்க எல்லா காசும் அப்பாக்கிட்ட இருக்கு என்கிறார். கதிர் இரவு கார் ஓட்ட செல்ல வீட்டினர் கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றனர். மீனா சொல்லாமல் கொள்ளாமல் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறார்.

அவரை தேடி தேடி செந்தில் மற்றும் கதிர் அழைந்து கொண்டு கடைசியில் கண்டுபிடிக்கின்றனர். மீனா மற்றும் செந்தில் சமாதானம் செய்கின்றனர். கோமதி வீட்டில் கதிர் நினைத்து வருத்தப்பட ராஜியை உன்னை கட்டிக்கொண்டு இப்படி கஷ்டப்படுறான் என்கிறார். மீனா அவளா கட்டிக்கணும் சொன்னா என அரசி இருக்கும்போது உளற எபிசோட்கள் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top