Connect with us

Cinema News

தம்பியை ஹீரோவாக்கும் விஷ்ணு விஷால்!.. டைட்டில் என்ன தெரியுமா?.. கமலே வாழ்த்திட்டாரே!..

விஷால், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த கிருஷ்ணா ராம்குமார் இயக்கத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். மாடர்ன் லவ் சென்னை எனும் ஓடிடி ஆந்தாலஜி படத்தில் ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற கதையை இவர்தான் இயக்கி இருந்தார்.

அந்த ஓடிடி ஆந்தாலஜி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்தை கிருஷ்ணா ராம்குமார் இயக்குகிறார். அந்த படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே!.. குஷ்பு வந்தவுடனே சந்திரமுகியா மாறிய சுந்தர். சி?

சமீபத்தில், விஷ்ணு விஷால், ருத்ரா, கிருஷ்ணா ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் போஸ்டருடன் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்த நிலையில், அந்த போஸ்டரில் கையெழுத்து போட்டுக் கொடுத்து தனது ஆசியை வழங்கினார்.

கமல்ஹாசனின் வாழ்த்துக்களை பெற்று தனது தம்பியை அறிமுகம் செய்ய உள்ளார் விஷ்ணு விஷால். வித்தியாசமான ரொமாண்டிக் காமெடி படமாக ஓஹோ எந்தன் பேபி உருவாகி வருவதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கேப்டனை நடிக்க வைக்க நடிகை பட்ட பாடு! கடைசியில் சண்டையில் முடிந்த சம்பவம்..

ஒரு பக்கம் அதர்வா தனது தம்பி ஆகாஷை ஹீரோவாக்கி வருகிறார். இன்னொரு பக்கம் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷாலும் தனது தம்பி ருத்ராவை கோலிவுட்டின் புதிய ஹீரோவாக அறிமுகமாக்க உள்ளார்.

கோலிவுட்டில் திடீரென இப்படியொரு வாரிசு நடிகர்கள் களம் இறங்க காத்திருக்கின்றனர். இதில், யார் நல்ல படங்களையும் நல்ல நடிப்பையும் கொடுத்து மேலே வரப் போகின்றனர் என்பதை காண காத்திருப்போம்.

இதையும் படிங்க: பீப் சாங்கை விட மோசமான பாட்டு!.. பிக் பாஸ் டைட்டில் வின்னரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top