Cinema History
ஓவியராக ஆசைப்பட்ட சிவக்குமார் நடிகரானது எப்படி தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்!…
60களில் வெளிவந்த சில திரைப்படங்களில் மகன், தம்பி உள்ளிட்ட சில வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சிவக்குமார். பல திரைப்படங்களிலும் இவர் அப்படித்தான் நடித்தார். 1970 மற்றும் 80களில் வெளிவந்த பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கவிக்குயில், அக்னி சாட்சி, பத்ரகாளி, கந்தன் கருணை, வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அன்னக்கிளி போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவாக திரையுலகில் வலம் வந்தார். மது அருந்துவது போலவோ, சிகரெட் பிடிப்பது போலவோ அதிகம் நடிக்காத நடிகர் இவர். சில படங்களில் காட்சிக்கு முக்கியம் என்பதால் மட்டுமே அப்படி நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரைவி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். 90களில் குணச்சித்திர நடிகராக மாறினார். கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் அப்பா வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்போதும் சிவக்குமார் நடிப்புக்கு பஞ்சம் வைத்தது இல்லை.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இப்போது அவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். உண்மையில், சிவக்குமாருக்கு ஒரு ஓவியனாக வேண்டும் என்பதுதான் ஆசை. நன்றாக ஓவியம் வரையும் திறைமை கொண்டவராக இருந்தார். ஆனால், திரையுலகம் இவரை நடிகராக மாற்றிவிட்டது.
இதையும் படிங்க: படத்துக்காக பல்லையே பிடுங்கிய சிவக்குமார் – எந்த படம்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘நான் கோவையிலிருந்து சென்னை வந்தபோது ஒரு ஓவியராக என் காலத்தை கழித்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாடகத்தில் நடித்தேன். அதைப்பார்த்த பேராசிரியர் ஒருவர் ‘உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது. நீ பெரிய நடிகனாக வருவாய். அதற்கு முயற்சி செய்’ என சொன்னார்.
எனவே, நானும் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டேன். ஏவிஎம் தயாரித்த காக்கும் கரங்கள் படத்தில் அறிமுகமானேன். அப்போது ஏவிஎம் நிறுவனமும், அப்படத்தின் இயக்குனர் திருலோகச்சந்தரும் நான் வரைந்த ஓவியங்களை பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால், நான் காட்டவே இல்லை. படப்பிடிப்பு முடிந்தபின் அதை அவர்களுக்கு காட்டினேன். பார்த்துவிட்டு ‘இவ்வளவு அழகாக வரையும் நீங்கள் ஏன் நடிக்க வந்தீர்கள்?’ எனகேட்டார்கள். ‘இப்படி நீங்கள் சொல்லக்கூடாது என்பதால்தான் அதை உங்களுக்கு காட்டவில்லை’ என்று சொன்னேன்’ என சிவக்குமார் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் படம் கொடுத்தும் ஆயிரக்கணக்கில்தான் சம்பளம்… சிவக்குமார் கூறிய வியக்கவைத்த காரணம்…