Cinema History
காதலை சொல்லி கலாய் வாங்கிய அட்லீ… கல்யாணத்துல கூட தளபதி ஸ்டைல்தான் போல!…
Atlee: அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. பின் இவர் தெறி, மெர்சல், பிகில் என பல திரைப்படங்களை இயக்கினார்.
இப்படங்களும் இவருக்கு வெற்றியை தேடி தந்தன. இப்படி தமிழ் கதாநாயகர்களையே வைத்து இயக்கி கொண்டிருந்த இவருக்கு பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு அமைந்தது. அப்படி இவர் இயக்கிய திரைப்படம்தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடித்திருந்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் வாசிங்க:ஆண்டவரே ‘தக் லைஃப்ல’ இருந்த காஸ்டியூம்லயே வாங்க! நாளைக்கு தேவைப்படும் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்
ஆனால் இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும் போது பல வித எதிர்மறையான கருத்துகளையே பெற்றுள்ளார். ஆனால் அது எதையுமே இவர் கண்டுக்காமல் தொடர்ந்து தனது பாதையிலேயே பயணித்து வருகிறார். இவர் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். தான் வாழ்வில் என்னவொரு முடிவினை எடுத்தாலும் விஜய்யிடமும் அவரது கருத்தினை கேட்பாராம். அந்த அளவுக்கு இவர்கள் நெருக்கமானவர்கள்.
ஆனால் என்னதான் இவர் விஜய்க்கு நெருங்கியவராக இருந்தாலும் திருமணத்தில் கூட இவர் விஜய்யின் ஸ்டைலையே ஃபாலோவ் செய்துள்ளார். இவரின் மனைவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கனாகாணும் காலங்கள் மூலம் பிரபலமடைந்த ப்ரியா. முதலில் அட்லிதான் பிரியா மீது காதல் கொண்டுள்ளார். ஆனால் இவர் அந்த சமயத்தில்தான் ராஜா ராணி திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார்.
இதையும் வாசிங்க:படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய ஜெயலலிதா!.. பதறிப்போன இயக்குனர்.. நடந்தது இதுதான்!…
அதனால் இந்த சமயம் நமது காதலை சொன்னால் சரிவராது என நினைத்து தனது காதலை சொல்லவில்லையாம். பின் ராஜாராணி பட வெற்றிக்குப்பின் பிரியாவிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் பிரியாவோ அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் ‘காமெடி செய்யாதீங்க டைரக்டரே’.. என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
ஆனால் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்தே ஆக வேண்டும் என நினைத்த அட்லீ பின் பிரியாவின் வீட்டிற்கே சென்று அவரை பெண் கேட்டுவிட்டாராம். பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணமும் நடைபெற்றதாம். ஆனால் இவர்கள் திருமணம் நடைபெறுவதற்கு இடையில் இருந்த காலகட்டதில் தான் இவர்கள் இருவரும் காதலித்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் விஜய்யும் இவரைபோலதான் திருமணம் ஆனபின்தான் சங்கீதாவை காதலித்ததாக கூறியிருந்தார். அவருக்கு நெருக்கமான அட்லியும் அதே ஸ்டைலைதான் ஃபாலோவ் செய்துள்ளார் போல.
இதையும் வாசிங்க:கஷ்டப்படும்போது இப்படித்தான் இருந்தேன்!… படப்பிடிப்பில் அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்..