Cinema History
பாதி படத்துல சம்பளத்தை ஏத்திக்கேட்ட சிம்பு!.. உருப்புடாம போனதுக்கு இதுவும் முக்கிய காரணம்…
Published on
Silambarasan: தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிலம்பரசன். மாஸ்டராக தொடங்கிய இவர் லிட்டில் சூப்பர்ஸ்டார் எனும் பட்டதை பெற்றார். காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின் இவர் நடித்த மன்மதன் திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாகவும் மாறினார். ஆடல், பாடல், இயக்கம் என பன்முகத்திறமை கொண்டவர். இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவு இவர் தனது படங்களின் மூலம் மக்களை கவர்ந்துள்ளார்.
இதையும் வாசிங்க:மொத்த பேரும் முட்டாளுங்க!.. படம் எடுத்து வீணாப்போனேன்!. புலம்பும் கஞ்சா கருப்பு..
தொடந்து காதல் தோல்விகளை சந்தித்து வரும் சிம்பு ஆரம்பத்தில் நடிகை நயனை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டன. வல்லவன் திரைப்படத்தில் இவர்கள் நடித்த போது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாய் கூறப்பட்டது.
ஆனால் பின்னர் ஹன்சிகா மோத்வானியை காதலித்து அதுவும் தோல்வியையே சந்தித்தது. பின்னர் இவர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் வாங்கும் சம்பளம் அனைத்தையுமே இவரது தந்தையான டி.ராஜேந்தர்தான் முடிவு செய்வாராம். இதற்கு ஏற்றாற்போல் இவர் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இதையும் வாசிங்க:வடிவேல் எவ்ளோ கேவமலமானவர் தெரியுமா?!.. புட்டு புட்டு வைக்கும் காமெடி நடிகர்..
இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கோபிகா நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குனர் துரை இயக்கினார் மற்றும் கலைபுலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்தார். இப்படம் தயாராகி கொண்டிருந்த போது படத்தின் பாதியிலேயே டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி இருவரும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று சிலம்பரசனுக்கு இப்படத்தில் பேசிய சம்பளம் குறைவு எனவும் எனது மகன் அந்த சம்பளத்திற்கு சம்மதம் கூற மாட்டான் எனவும் கூறியுள்ளார்.
உடனே அங்கிருந்த தாணு சிலம்பரசனை அழைக்குமாறும் மேலும் அப்படி அவர் குறைந்த சம்பளத்துக்கு தான் நடிப்பதாக ஒப்பு கொள்ளவில்லை என்றால் நான் பேசிய தொகையிலிருந்து 10 மடங்கு சம்பளத்தை அவருக்கு தருகிறேன் எனவும் கூறியுள்ளார். பின் சிம்புவை வரவைத்து பேசியபோது அவரும் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க சம்மதித்ததை ஒத்து கொண்டார். பின் கோபமான கலைபுலி எஸ்.தாணு பணத்திற்காக சண்டை போட வந்த டி.ராஜேந்தரிடம் சிம்புவிற்கு பேசப்பட்ட தொகையை விட அதிக தொகையை ஒரே காசோலையில் எழுதி கொடுத்துவிட்டாராம். இப்படி சிம்பு தான் விரும்புவதை தனது தந்தையின் மூலமாக சாதித்து கொள்வாராம்.
இதையும் வாசிங்க:ஏன்டா நடிச்சோம்னு ஆயிடுச்சி!. மணிரத்னம் பட அனுபவம் சொல்லும் பிரபல நடிகை…
லேடி சூப்பர்ஸ்டார்னு சொன்னதும் நயன்தாரான்னு நினைச்சுடாதீங்க. அப்பவே அந்தப் பட்டத்தை ஒரு நடிகைக்கு கொடுத்தாங்க. இப்ப அவங்க ரேஞ்சே வேற. அவர்...
பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணனின் சொந்தப் படம் சூரசம்ஹாரம். கமல், நிரோஷா, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, கிட்டி, ஜனகராஜ்...
வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தப் பாத்திரம் ஆனாலும் வெளுத்து வாங்கும் நடிகர் தான் அசோகன். எம்ஜிஆர் படங்களில் பிரதான வில்லனாக...
பாக்கியராஜின் சீடர்கள் தான் பாண்டியராஜனும், பார்த்திபனும். இருவரும் 2 படங்கள் இயக்கியதுமே நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதே போல கதை, திரைக்கதை,...
16வயதினிலே படத்திற்குப் பிறகு பாரதிராஜா தனது அடுத்த படத்துக்கு எல்லாமே புதுமுகங்கள் தான் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு இளையராஜா உள்பட...