Cinema News
எனக்கு அது இல்லாம இருக்க முடியாது! ‘பொம்பள சோக்கு’க்கு சரியான விளக்கத்தை கொடுத்த பப்லு
Actor Prithviraj: தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரித்விராஜ் என்கிற பப்லு. அவள் வருவாளா, வானமே எல்லை, டைம் போன்ற பல படங்களில் ஒரு செகண்ட் ஹீரோவாக நடித்தவர். தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதுவும் குறிப்பாக செல்வி சீரியலில் திருநங்கையாக நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார். இதற்கிடையில் சில மாதங்கள் முன்பு 24 வயது பெண்ணுடன் லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இதையும் படிங்க: கையில் சரக்குடன் இறுகப்பற்று ஹீரோயின்!.. இந்த குளிருக்கு செம மேட்டர் தான் போங்க!..
அதுமட்டுமில்லாமல் கப் கேக் என்று செல்லமாக அந்த பெண்ணை அழைத்து வரும் பப்லு ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து ரசிகர்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டினர். இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வைரலாகி வருகின்றது.
அதை உறுதிபடுத்தும் விதமாக பப்லுவும் சரி அந்த பெண்ணும் சரி இதுவரை அதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சமீபகாலமாக பப்லு பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இனிமேல் என் சொந்த வாழ்க்கையை பற்றி பேசப்போவது இல்லை என்றும் அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மெடிக்கள் மிராக்கிள்!.. 5 வயசிலயே கமல் அப்படியா?!.. ஆச்சர்ய தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…
இந்த நிலையில் பப்லுவை கடுமையாக விமர்சித்து ஒரு பிரபல பத்திரிக்கையாளர் காரசாரமாக பேசியிருந்தார். அதாவது இந்த வயதில் அந்த பெண்ணுடன் இருக்கிறார் என்றால் அதுவும் வயது குறைவான ஒரு பெண்ணுடன் இருக்கிறார் என்றால் முக்கிய காரணம் ‘செக்ஸ்’க்காக மட்டும்தான் என்று கூறியிருந்தாராம்.
இதற்கு பதிலளித்த பப்லு ‘ஆமாம். எனக்கு தேவைப்படுகிறது. எனக்கு அது பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுகிற மாதிரி. இப்பவும் தினமும் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அதற்கான சக்தியை எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறார். இதுல என்ன தப்பு?’ என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஹீரோவை தேடி தெருதெருவாக அலைந்த பாரதிராஜா!.. பாண்டியன் உருவான கதை தெரியுமா?…