Connect with us

Gossips

கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..

சி எழுத்து நடிகர் சின்சியராக இரவு பகல் பாராமல் பழைய பிரச்சனையை பற்றி மட்டும் கேட்காதீங்க என முன் அறிவிப்புடன் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், கடைசி நேர சிக்கலாக அவருடைய படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ஒரு பூதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு முன்பாக சில கோடி கடனை செட்டில் செய்ய வேண்டும் என அறிவிக்க அந்த படத்தை இன்னமும் வெளியிடாமல் அந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் அயலானுக்கு ஆப்பு அடித்த கேப்டன் மில்லர்!.. ஐமேக்ஸ் ரிலீஸ் வேற!.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

இந்நிலையில், திடீரென இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிராகவும் சில வழக்குகள் உள்ளதாகவும், அதிக கடன் சிக்கலில் சி எழுத்து நடிகர் படம் சிக்கியிருப்பதால் பெரிய படங்களுடன் ரிலீஸ் ஆனால், கண்டிப்பாக பணம் திரும்ப கிடைக்காது என்பதால் ஃபைனான்ஸியர்கள் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸுக்கு பங்கம் விளைவித்துள்ளதாக ஷாக்கிங் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

எப்படியாவது ரிலீஸ் செய்து விடுவோம் என தயாரிப்பு நிறுவனம் கொடுத்த வாக்கை நம்பி அடுத்த படத்தின் படப்பிடிப்பையே ஒதுக்கி வைத்து விட்டு அந்த படத்தின் லுக்கை அப்படியே ரிவீல் செய்து இந்த படத்துக்காக பல புரமோஷன்கள் செய்து வருகிறார் நடிகர். ஆனால், கடைசியில் எல்லாம் பலனளிக்காமல் போனால் பெரிய சண்டையே நடக்கும் என்கின்றனர்.

இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..

சி எழுத்து நடிகர் படத்தை வெளியிட விடாமல் தடுக்க சில சதிகளும் நடப்பதாகவும் ஏற்கனவே அந்த படத்தையும் அப்படி செய்து தான் தள்ளி போக செய்ததாகவும் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top