படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா!.. இந்த டைம்ல இப்படியெல்லாம் நடிக்கணுமா செல்லம்!..

Published on: January 31, 2024
samantha
---Advertisement---

Actress samantha: தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருபவர் நடிகை சமந்தா. தமிழை விட இவர் அதிகம் நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தன. தமிழில் பெரிய நடிகர்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர் சினிமா உலகில் இவ்வளவு உயரம் தொட்டதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இத்தனைக்கும் அவருக்கு எந்த சினிமா பின்புலமும் இல்லை. பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை பெரியது. பல வதந்திகள், விமர்சனத்திற்கு உள்ளாகி மீண்டு வந்த பெண் போராளி என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: கமல் படத்தில் வசமாக மாட்டிக்கொண்ட முழிக்கும் எஸ்.கே.. செம கடுப்பில் முருகதாஸ்!.. நடப்பது இதுதான்!..

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா சில வருடங்களில் அவரை பிரிந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கபப்ட்டது. ஆண் ஆதிக்க சிந்தனையுள்ள பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர் மீது பொய்யான விஷயங்களை சொல்லி வன்மத்தை தீர்த்துக்கொண்டனர்.

ஆனால், அது எல்லாவற்றையும் புன்னகைத்தபடியே கடந்து போனார் சமந்தா. விவாகரத்துக்கு இழப்பீடாக பல கோடிகளை நாகார்ஜுனா தரப்பு கொடுக்க முன்வந்தும் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்லி தன்னம்பிக்கையுடனும், சுய கௌரவத்துடன் வெளியேறியவர் சமந்தா.

இதையும் படிங்க: அவ்ளோ வெறி புஷ்பாவுக்கு!.. இடுப்புல கை வச்சு கடிச்சித் திங்கிற மாதிரி பார்க்கிறாரே ரேஷ்மா!..

ஒருபக்கம், தோல் நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதற்காக சிகிச்சைகளையும் பெற்று வருகிறார். தற்போது ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பேமிலி மேன் எடுத்த இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. சமந்தாவால் அதில் நடிக்க முடியுமா என இயக்குனர் யோசித்த போது தன்னம்பிக்கையுடன் நடிக்க முன்வந்திருக்கிறார் சமந்தா. காட்சி முடிந்ததும் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். அதன்பின் அவருக்கு சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பொங்கல் ரிலீஸ்!.. 500 கோடி வசூலை அள்ளிய டோலிவுட்.. 200 கோடிக்கே முக்கும் கோலிவுட்.. ஆரம்பமே இப்படி?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.