ரஜினி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ஏனெனில் இந்த படத்தின் முதல் பாகம் 2013ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றது இந்த திரைப்படம்தான். 600 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்தது.

தற்போது ஜெயிலர் 2 படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதே சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், விஜய் சேதுபதி, ரித்திக் ரோஷன் உள்ளிட்ட சிலர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்..

ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இந்த படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் Bindaas பாடலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலில் நிறைய ஹிந்தி வார்த்தைகள் வருகிறது. .அதோடு.. இது எவனுக்கும் புரியாதே என்கிற வரியும் வருகிறது. உண்மையிலேயே இந்த பாடல் வரிகள் யாருக்கும் புரியவில்லை.

இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுத அனிருத்தும், தீப்தி சுரேஷும் இணைந்து பாடியிருக்கிறார்கள்,
ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்ற ‘காவலா’ பாடலை போல இந்த பாடலை படக்குழு உருவாக்கியிருக்கிறது. ஆனால் அந்த பாடலைப் போல இந்த பாடல் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.