மறைந்த ஜாம்பவான்கள் பாரதிராஜா, பாக்கியராஜை நினைவுகூரும் வகையில் நடந்த ஒரு விழாவில் நடிகை ரேவதி பாரதிராஜா குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

நான் இன்னைக்கு நடிகையா இருக்கேன்னா அதுக்கு காரணம் குரு பாரதிராஜா தான். மண்வாசனையில் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு திரை உலகில் யாரும் கிடையாது. யோசித்துக் கூட பார்க்கல. ஒவ்வொரு விஷயமும் நான் பண்ணினது அவரோட முகத்தைப் பார்த்து நான் கத்துக்கிட்டதுதான். எனக்கு ஜாஸ்தி திட்டு கிடைக்கல. நான் அவரு சொல்லக்கூடியதை அப்படியே பண்ணிடுவேன்.

எனக்கு குரு சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம். நம்ம கண்கள் வந்து ஏதாவது ஒரு உணர்வு பண்ணும்போது மனசால அதை உணர்ந்து செய்யணும். இல்லன்னா கண்கள் பொய் சொல்லிடும். அது வந்து கேமரால நல்லா தெரியும். கொஞ்சம் யோசிச்சிப் பாரு. நீ இங்கே நிக்கிறது முத்துப்பேச்சியா? முத்துப்பேச்சியா நீ உணர்ந்து என்ன செய்தாலும், அழுதாலும், சிரிச்சாலும், பாட்டுப் பாடுனாலும் முத்துப்பேச்சியா உணர்ந்து செஞ்சாதான் அது வந்து ஆடியன்ஸ போய்ச் சேரும்.

கேமரா பொய் சொல்லாது. அதனால கேமராக்கு முன்னாடி நீ பொய் சொல்லாத. அப்படி கத்துக் கொடுத்த ஒரு அழகான பாடம் தான் நான் இன்னைக்கு வரைக்கும் எடுத்துட்டுப் போயிருக்கேன். ஒரு கேரக்டர் எனக்குப் பிடிக்கலன்னா நான் அதை செய்ய மாட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் கத்துக் கொடுத்ததுதான் என்கிறார் ரேவதி.