Connect with us

GPay-ல 500 இருக்கான்னு கேட்டான்.. இன்னைக்கு 11 கோடி!.. அபிஷன் நண்பரின் வைரல் போஸ்ட்!..

latest news

GPay-ல 500 இருக்கான்னு கேட்டான்.. இன்னைக்கு 11 கோடி!.. அபிஷன் நண்பரின் வைரல் போஸ்ட்!..

சினிமா எப்போது யாரை மேலே தூக்கி விடும் என சொல்லவே முடியாது. பெரிய நடிகர், பல கோடி பட்ஜெட் போட்டு எடுக்கும் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியடையும். ஒருபக்கம் கதையை நம்பி அறிமுக நடிகரை வைத்து மினிமம் பட்ஜெட்டில் எடுத்த படம் நல்ல வெற்றியைத் தரும்
. அதாவது பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்த்தால் அந்த படம் வெற்றி பெறும்.. அவ்வளவுதான்..

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெளியாகும் சில படங்கள் ரசிகர்களிடம் வரவெற்பை பெற்று வருகிறது. குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன், சிறை படங்களின் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வித் லவ் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்..

இந்த படம் வெளியான மூன்று நாட்களில் 11 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ள அபிஷனின் நண்பர் ஒருவர் ‘GPay-ல 500 இருக்குமாடா என கேட்டதிலிருந்து.. மூன்று நாட்களில் 11 கோடி’ என பதிவிட்டிருக்கிறார்.இந்த போஸ்ட்க்கு ஸ்மைலி மற்றும் ஹார்ட்டின் விட்டிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இந்த போஸ்ட் சமூக விரதத்தில் வைரலாகி வருகிறது..

To Top