Connect with us

Tourist Family: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனரின் அடுத்த சாய்ஸ் இந்த நடிகர்களா? மெர்சல் ஆக்குறாரே

latest news

Tourist Family: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனரின் அடுத்த சாய்ஸ் இந்த நடிகர்களா? மெர்சல் ஆக்குறாரே

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அபிஷன் ஜீவந்த். முதல் படத்திலேயே யாருப்பா இந்த இயக்குனர் என அனைவரையும் பிரமிக்கவைத்தார். எதார்த்தமான கதையை எதார்த்தமான வாழ்வியலோடு எடுத்து பாமர மக்களில் இருந்து அனைவர் மத்தியிலும் கொண்டு போய் சேர்த்தார். அதிலிருந்தே அபிஷன் ஜீவந்த் மீது ஒரு தனி மரியாதை கோலிவுட்டில் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

எப்போதுமே முதல் படம் ஹிட் கொடுத்துவிட்டால் அடுத்த படம் என்ன கதையாக இருக்கும்? யாரை வைத்து இயக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் எல்லார் மத்தியிலும் இருக்கும். அப்படித்தான் அபிஷன் ஜீவந்த் மீதும் இருந்தது. ஆனால் அடுத்து அவர் ஹீரோவாக களமிறங்கினார். சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அபிஷனின் உதவியாளர் மதன் இயக்கத்தில் வித் லவ் என்ற படத்தில் நடித்தார்.

அந்தப் படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தில் அபிஷனுக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த தனது அப்டேட்டை வழங்கியுள்ளார் அபிஷன்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றிக்கு பிறகு அவரை சூர்யாவும் நானியும் அழைத்து பாராட்டியிருக்க்கிறார்கள். ஒரு வேளை அபிஷன் அடுத்து சூர்யாவை வைத்தும் நானியை வைத்தும் படம் பண்ணப் போகிறாரா என்ற கேள்விக்கு அந்த இருவரையும் நான் சந்தித்தேன். ஆனால் அப்போது என்னிடம் ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை. ஆனால் அடுத்து நான் இயக்கப் போகும் படம் எமோஷனலான, காமெடி கலந்த ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும்.

அதுவும் ஒரு பெரிய ஸ்கேலில் பண்ணப் போகிறேன். அதன் ஒன் லைனே தனித்துவமாக இருக்கும். கண்டிப்பாக நல்ல கதையாக அது வெளிவரும். அதற்கு அடுத்தபடியாக நான் டைரக்ட் செய்யப் போகும் மூன்றாவது படம் சையின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

To Top